நிருவிகற்ப சமாதி
பாரென்ற நிருவிகற்ப சமாதிகேளு பாங்கான தத்வலய சமாதிமுற்றித் தாரென்ற சத்தானுவித்தானு வித்தைமுற்றித் தனைமறந்து தூக்கமுறு மயக்கம்போல வாரென்ற பிறசத்தங் காதிற்கேளா
மருவியந்தப் பூரணத்தே லயித்துச்சித்தம் நேரென்ற சைதந்நியமாகப் போனால் நிருவிகற்ப சமாதிஎன்ற நேர்மையாச்சே.
நேர்மையாய்ச் சமாதிவிட்டுச் சஞ்சரிக்கில் நினைவாகச் சமாதியிலே இருக்கும் போது தீர்மையாய்க் காலம்என்ற திரியத்துள்ளும்
சிதைந்தபிர பஞ்சமெலாம் பொய்என்றுஎண்ணு வேர்மையாய் விகாரத்தாலே தோன்றி
விரிந்தபிர பஞ்சத்தின் பாசந்தள்ளித் தேர்மையாய் நிருவிகற்ப மாகநின்றால் தெளிவான நிருவிகற்ப சமாதிஆச்சே.
ஆச்சென்ற தத்வலய சமாதிமுற்றி
அறிவான நிருவிகற்ப மாகும்போது நீச்சென்ற நிருவிகற்ப சமாதிக்குள்ளே
நேரான விக்கினங்கள் ஒருநான்கு உண்டு தூச்சென்றது எவைஎன்றால் சொல்லக்கேளு எழுத்திலயம் விட்சேபம் சட்சேபமாகும் காச்சென்ற ராசமாம் சுவாசம்என்று
கருத்தூன்றிச் சொல்லுவது நாலுந்தானே.
நாலுஎன்ற இதற்குஉள்ளே லயத்தைக்கேளு நனிந்துநின்ற நித்திரைதான் விட்சேபந்தான் காலென்ற ராகமுறுங் கலக்கத்தாலே
கலந்துவரும் வாசனையும் கரணத்தாலே மாலென்ற மனோராச்சி யத்தினாலே
வருகுதல் சட்சேப நிந்திரையும்அல்ல ஆலென்ற மனோராச்சி யந்தானும்அல்ல அறிவான சொரூபமது மறந்துபோமே.
அதுமறந்து மூடமாய் அகன்றுநிற்கும்
மத்தியதில் ராசமாஞ் சுவாசம்ஆகும் அதுமறந்து நமக்குமன மொழிந்தவிந்த
நணுகிநின்ற சொரூபத்தே சந்தோசித்துச்
சதுமறந்து தனித்துயர்ந்த சமாதியுள்ளே
தனித்துநின்ற ஆனந்த அனுபோகத்தைத்தந்து
அதுமறந்து போம்நாலு விக்கினமாற்று
நலமுற்ற சொரூபத்தில் லயித்துநின்றே.
லயிக்கவே நன்றான அகண்டவிர்த்தி
ஆடாத காற்றில்லா விளக்குப்போல அயிக்கவே அலைச்சலற்று நீரும்உப்பும்
அடங்கிநின்ற வாறதுபோல் அழுந்திநிற்கும் தயிக்கவே பிரமன்மால் உருத்திரனும் கேட்டுத்
தனித்துமே வேற்றுருவாய்ப் பிரம்மந்தானாய் இயக்கவே இப்படித்தான் கடிகைஒன்றே
அறுநேரம் கடிகையுற்றால பலத்தைக்கேளே.
கேளுமே அகவாதி யாகம் கோடி
கிருபைபண்ணிச் செய்ததோர் பலத்துக்கொக்கும்
மூளுமே இப்படிதான் சமாதிமூட்டில்
முனையாகிச் சுழுத்திஎன்று எண்ணவேண்டாம் தேளுமே சுழுத்திக்குச் சித்தம்தானும்
தியங்கி நின்று நினைவற்று நசித்துப்போகும்
ஆளுமே சமாதிக்கி யாம்பிரமம்என்றே
ஆண்மையாய் அறிவுஇருத்தி இருக்கும்பாரே.