Pokar 7000fist kandam pusandar yogam page no 25

 

Locker books



புசண்டர் யோகம்

வந்தேறி நெஞ்சினுள்ளே நினைவையொட்டி வளர்ந்தே பனிப்புகைபோல இழைஞ்சிஓடும் பந்தேறி நினைவைஉன்னிப் பற்றிப்பாரு பரிந்துமே மேற்கொண்டால் உன்னியாடு மந்தேறி மகேச்சுரத்தே நின்றுபாரு
மருவவே மதற்குள்ளே நான்கைக்கூட்டு புந்தேறிச் செய்தவரார் என்றால்கேளு புசண்டர்செய்தார் சதாநித்தம் பூட்டியாடே.




ஆடவே அவர்செய்த வகைஏதுஎன்னில் ஐயமாம் கும்பகந்தான் அறுபான்நான்காம் பூடவே பூரகந்தான் பதினாறாகும்
புகையான ரேசகம்முப் பத்திரெண்டாம்
ஆடவே அவர்இருந்து பேறுபெற்றார் அழகான கற்பமா மரத்தின்மேலே காடவே காகம்என்ற உருவைக்கொண்டு கண்டிருந்தார் கோடியுகம் கரைகாணேனே.
கரைகாணாக் கோடிபிரம்மா தம்மைக்கண்டார் கரையற்ற விண்டுமயங் கோடிகண்டார் தரைகாணாச் சங்காரம் கோடிகண்டார்
தாக்கோடே மகேச்சுரத்தைத் தாண்டிநின்று துறைகாணாச் சதாசிவந்தான் ஒடுங்கிச்சத்தி தொலையாத நாதமுடன் விந்துஅற்றுத் திரை காணாச் சிவம்சென்று சிற்பரையில்சேர்ந்து தெளிவான பூரணத்தில் சொக்கினாரே.
சொக்கியே புசண்டருமே அவளைத்தொட்டுச் சாத்திஎன அகண்டலத்தில் கணந்தான்நின்றார் புக்கிஇந்திர சாலவித்தை போட்டாள்ஆயி புரிந்துமே கணப்போதில் பின்னும்வந்து நிக்கிதெசம் எனவிரித்தாள் கூடாரத்தை
நிமிடத்தில் அண்டம் எல்லாம் நிறைந்துபோச்சு சுக்கியிதை வேணும்என்றால் துடைக்கவல்லாள் சுருதிக்கு வித்தான முத்தித்தாயே.
முத்தியிலே நின்றுஉவந்த புசண்டமூர்த்தி
முன்போலக் கற்பகமே ஆவாய்என்றார் பத்தியிலே அவர்மேலே கூடாதென்றார் பார்க்கையிலே கூட்டோடே விருட்சமாச்சு நித்தியிலே நின்றுரைத்த சித்தைப்போல
நிலவரமாய்க் கூட்டுக்குள் அமர்ந்துநின்றார் கத்தியிலே நிற்கிறதோர் பூவைப்போலே கண்டத்தே நின்றுஉரைத்துக் கருதினாரே.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்