புசண்டர் தோற்றம்
உரைத்துமே புசண்டரது பிறப்பைக்கேளாய் யுகந்தமது உண்டுஅன்னம் களிக்கும்போது பரைத்துமே பரிதிமுதல் சோமனையும்தரித்த பராபரமும் பார்ப்பதியும் பார்த்தாரத்தை நிறைந்துமே சிவகலைதான் காகம்போல
நேர்ந்தணைய அன்னமங்கே நிறைகெர்ப்பமாயிற்று
இரைத்துமே இருபதிற் றொன்றுபிள்ளை
ஈசனது கலையாலே புசண்டராச்சே.
ஆச்சென்ற இருபதுபேர் கன்மத்தாலே அனேகநாள் இருந்துமே கழிந்துபோனார் போச்சென்ற இவர்பிடித்தார் பிராணயோகம் பேரான சீவகளை புகுந்ததாலே பேச்சென்ற ஆண்பிறந்தாற் பிள்ளையாமோ பேறுபெற அவர்போலே யாருக்காகும் ஊச்சென்ற முந்திமுந்தி மூலயோகம்
ஒளிர்வுகண்ட மட்டுமே நெஞ்சிற்பாரே.
பாரென்ற நெஞ்சினிற்கு நடுமூலந்தான்
பரிநேராய்ப் பார்த்துமே பழக்கமாகிப் பூரென்றே வந்ததென்றால் புசண்டமூர்த்தி பொரிநெருப்புப் பஞ்சில்பட் டாற்போலாகும்
பேரென்ற பரந்தேறும் போகரையா
பின்குஞ்சி லிறகொடிந்து காலும்போனால் ஏரென்ற வினத்தோடே கூடாதாப்போல இளமையிலே மூலத்தைக் கூடிடாயே.
கூடாட்டால் அரிதரிது பிராணன்என்றார்
கூறியதோர் சொன்னமொழி கேட்டுப்பொங்கி ஆடாட்டால் அடியற்ற மரம்போல்யானும்
அவர்பதத்தில் விழுந்துஎழுந்தேன் உண்மையாக
காடாட்டால் ஐயர்என்று போகமூர்த்தி
நம்மைப்போல் வாழ்ந்திரு என்று எடுத்தாரையா டாட்டல் சொன்னமொழி மூலமாகி
முதிர்ந்துநின்ற பிராணனைத்தான் அறிந்திடாயே.
அறிந்திட்ட ஐயர்எங்கே இருப்பதுஎன்றால் ஆதிமகா மேருவுக்குத் தெற்கேயாகும் முறிந்திட்ட வாதமுண்டு ஞானம்உண்டு
மூர்க்கமாம்யோ கமுண்டுசித் தெல்லாமுண்டு புரிந்திட்ட பிராணனைத்தான் அறியப்பண்ணிப் பூரணந்தான் லயிக்கின்ற போதங்காட்டி உரிந்திட்ட தமர்வாசல் நுழைவுகாட்டி
உபதேசத் துண்மைதனை உரைத்திட்டாரே.
உரைத்திட்டே அழிக்கிறதும் கடைக்கிறதும்செய்தார் உரையான சிவயோக ஆண்மையாலே மறைத்திட்டே அனுப்பியே விடைகொடுத்து
மாசற்ற மூர்த்தியேபோய் வாரும்என்றேன் தரைத்திட்டே ஐயருமே சாகைக்குப்போனார் சாங்கமாய் பிள்ளைகட்குந் தன்மைசொல்லிப் புரைத்திட்டே பிராணனைத்தான் அறியுங்கள்என்று போதித்தேன் பிள்ளைகட்குப் புத்திதானே.
தானான இரண்டெழுத்தை யொட்டியேறில் சதிரான சிவயோகங் கையில்சிக்கும் ஆனான விசுத்தியிலே நின்றுகொண்டே அப்பனே நினைவாலே மூலம்பாரு கூனான சுழிமுனையும் சுழலாய்க்காணும்
குறிப்பாக வாசிவைத்துக் காலைஆட்டு
பானான பளிச்சென்று நந்திகாந்தி
பண்பான மதுவையுண்டு பரிந்துபாரே.
பரிந்துநின்று கண்டத்தே புருவமையம்பார் பண்பான சுடர்போல பகுந்துகாணும் குரிந்துநின்று குருபதத்தில் துவாதசத்தைப்பார்
கூர்மையாய்ப் பதினொன்றுங் கடந்துதோன்றும் கரிந்துநின்று கண்டத்தில் அனாகதத்தைப்பாரு கலங்காமல் பிராணனுமே நிலைத்துக்காணும் அறிந்துநின்ற அனாகதத்தே மால்பிரமாதம்மை அடுத்துப்பார் வெட்டவெளி எல்லாம் ஆமே.
அல்லாமல் தேகத்தை அறியஎன்றால் அடுத்தேறி உன்மனையில் நின்றுபாரு கல்லாமாங் கீழ்நோக்கக் கண்டீ ர்பத்துங் கையினால் பிடித்துவிட ஒன்றும்இல்லை வல்லாமல் லட்சியங்கள் வழியாச்சானால் வாராது நித்திரையும் பசியும்கேளு புல்லாமல் பிறர்சத்தங் கேளாப்பக்கல் புறத்திருந்து லட்சியத்தைப் பூட்டிமூடே.
பூட்டையிலே பிறர்சத்தங் கேட்டாதானால்
புலன்களது முட்கரமாய்ப் பிரித்தும்போடு மாட்டையிலே மனதுசற்றே வழுவிற்றானால்
மடையநாய் கடித்தவெள் எலும்பாய்ப்போவாய் சூட்டையிலே மனதுஅலைக்கும் சூட்டொட்டாது சோதனையால் குறிகள்எல்லாம் சுழற்றிப்போடும் காட்டையிலே கைநெல்லிக் கனிபோலாகும்
கடினமாய் வாசிவைத்துக் கருத்தை ஊணே.
ஊணிப்போம் கப்பலுக்கு நங்கூரம்போட்டால் உறுகின்ற வாசியைநீ உரத்துக்கட்டி ஆணிப்போம் அசையாமல் மனத்தைமாட்டி அடியோடே அடுக்காறு தலத்தில்ஓட்டி நாணிப்போம் புலன்தன்னைக் காட்டில்கட்டி நரிபரிக்குக் கடிவாளம் பூட்டிக்கூட்டி
மூணிப்போ முளையடித்துக் குருபதத்திற்பிடிக்க முனிந்தநிரா காரத்தில் மூட்டிஓட்டே
ஓட்டியே மூலத்தால் முத்திபெற்றால்
உத்தமனே பாட்டரென்ற மூலநாதர்
நாட்டியே நந்தியல்லோ உபதேசித்தார் நலமான மூலத்தில் நந்திநந்தி ஏட்டியே மூலத்தால் முத்திபெற்றார்
ஏற்றமாம் பாட்டரென்ற எட்டுப்பேரும்
மூட்டியே விபுகடந்த மூலமூலம்
மூலமென்று மூச்சுவிட்டுப் பேசொணாதே.
பேசொணா மூலத்தே எல்லாந்தோன்றும் பொருளாக விரிந்துநின்று பிரபஞ்சமாகிப் பேசொணாப் போகமெல்லாம் அனுபோகித்துப் பெரிதான மூலத்தே வந்துசேரும் பேசொணாக் தேசரத்தே உற்பனமும்லயமும்
போக்கொன்று வரத்தோன்று இரண்டும்சொல்வேன் பேசொணா அகாரமஃது உற்பனத்தைப்பண்ணும் பிரிந்துகொள்ளு உகாரத்தில் லயமுமாமே.
லயமான நிட்களமாம் அகாரம்ஒன்றில் நந்திஎன்பார் அதின்பெயரை அதுவேபோதம் ஒயமான ஓங்காரம் அதிலேநின்றே
ஓர்ஆறு தலமுருவி உயர்ந்துதாழ்ந்து நியமான பன்னிரண்டாய் நின்றேஆடி நிலைத்துநின்ற எட்டினது கலையைவாங்கி மயமான காமப்பால் இறைத்துஇறைத்து மாண்டுபோங் கள்ளருடன் மருவிடாதே.
மருவதுதான் எத்தனைஎன்றால் மூலத்தீயை மாட்டினால் வாசனையும் கைவிட்டேகும் கருவதுதான் வாய்ப்பேச்சால் கருதிடாதே காமப்பேய் பிடித்துபோற் கடுகஊணு உருவதுதான் மனம்ஒத்து அங்குஉள்ளேபார்த்தால் உற்றகள்வர் ஐவருமே ஓடிப்போவார் முருவதுதான் முன்பின்னே என்றாயானால் மூலத்தீய காலனாங்காலன் நிலைத்தானே.
தானான காலன்உண்டு உலகர்சொல்வார் தனிக்காலன் வேறில்லை மூலன்காலன் ஆனான ஆலம்உண்டார் நடனஞ்செய்தால் அதைக்கண்டு பதஞ்சலியும் அன்புகூர்ந்தார் கோனான பிரபஞ்சத்தில் தில்லைக்குள்ளே
கூட்பிட்டே ஆட்டுவித்துக் கூத்துங்கண்டார் ஆனான கன்னிஅன்று அங்குஆலங்காட்டில் ஆட்டுவித்தாள் திருநடனம் சிவனைத்தானே.
சிவசக்தி உந்தியிலே தானாய்நின்று சேர்ந்துநின்ற இடம்பாதத் துரியவீடாம் அவசத்த அபானனது நின்றுகொண்டே அதிகமல சலங்கழித்தே அருந்தல் கேட்கும் தவசத்த சமானன்அதில் கூடிக்கொண்டு
சாப்பிட்ட பதார்த்தம்எல்லாம் சமனாச்செய்யும் துவசத்த நெஞ்சான சுழுத்திஉள்ளே
துலங்கியதோர் எண்மர்சத்தி ஈசன்தானே.
ஈசன்என்ற இடத்துள்ளே பரனைக்கேளாய் ஈராறும் அதனுள்ளே காவலாச்சு தாசன்என்ற பதினொருவர் கருவிக்கூட்டம் தனித்துநின்ற பிராணன்அங்கே நிற்கும் அப்பா கோசன்என்று கொலுவிருந்தார் சக்திஈசன் கொள்கின்ற சொற்பனத்தின் வீட்டைக்கேளு பாசன்என்ற பரத்தினுடை அடியும்ஆச்சு
பாங்கான உதானன்அங்கே பாரித்தானே.
பாரித்துப் பதினான்கு கருவிக்கூட்டம்
பண்பாகக் கொலுவிருந்தார் பரமன்சக்தி வீரித்து அவ்விடத்தே நின்றவனார்விராடன் மீதுஉறைந்தால் முன்பின்னாம் இரண்டும்காணும்
ஏரித்தே எட்டினது களையைவாங்கி
இடிசூறை இட்டவிடம் ஏற்றிப்பாரு பூரித்துக் கடந்துமெள்ளப் புரூமையத்தே பேரான சாக்கிரமாந் தலம்இதுஆச்சே.
ஆச்சென்ற பதினான்கு கருவி கூட
அதில்நின்றார் சதாசிவனும் மணித்தா யாரும் வேச்சென்ற வியானன்அங்கே விரைந்துநின்றான் மேலான கொலுஆச்சுப் பிரபஞ்சம் ஆச்சு தோச்சென்ற கருவி அங்கே தொண்ணூற்று ஆறும் சுயம்பாக அதினுடைய தொழிலைச்செய்யும் மாச்சென்ற மறந்ததுஎல்லாம் தோற்றமாகும் மனங்குவித்து பூரணத்தின் கொலுஇதாமே .
தாமென்ற கொலுக்கண்டு கருவிக்கூட்டந் தனிந்துஅங்கே இந்திரியக் கூத்தும் கண்டு மாமென்ற மாமாயைப் பெண்ணின்ஆசை
மகத்தான படுகுழியில் மாய்ந்துகாண்பார் ஆம்என்ற வடிவுஎடுத்துஆங் காரம்கூட்டி
அழும்பான மயக்கத்தால் தான்மேலாகிப் பாமென்ற பாவத்தைத் தலைமேல்கொண்டு பாங்கான வாசனையில் புகுதுவாரே.
புகுதுவார் மூலத்தில் நாதங்கண்டு
புகுந்துமே தீஒளியில் கூடக்கூட்டிக் ககுதுவார் களைஇருந்த பானுவீட்டில்
கலங்காமல் கலந்துஅந்த ஒளியும்கண்டு தகுதுவார் சந்திரனாம் இந்துவீட்டில்
தாமதமாய் ரவிதணலை மேவப்பண்ணி
அகுதுவார் ஆறான சோனைபோல
அழுந்தவே உடல்குளிர்ந்து புளகமாமே.
ஆமென்ற சாம்பவி முத்திரையைக்காட்டி ஐங்கோணக் குருபதத்தில் புகழைக்கண்டு நாமென்ற நாதவிந்தாம் ஈசன்சக்தி
நற்கமல ஆயிரத்துஎட்டு இதழின்மையம் தாமென்ற ரவிகோடி மதிதான்கோடி
சார்ந்துநின்ற மூலத்தீ சதமாங்கோடி ஏமென்ற அவ்வொளிக்குள் நின்றுமேலே இருக்கிறதே தேகூஎன்ற பிரமம்தானே.
பிரமமாம் பிரமம்என்பார் போதம் என்பார் மிக்கசச்சி தானந்த வெளிச்சார்புஎன்பார் நிரமமாம் வேறொன்று இலாதநிர்க்குணந்தான் நின்மலமாம் கடந்துநின்ற வேதாந்தம் என்பார் விரமமாம் பிரபஞ்சம்எலாம் விளைந்ததுஎன்பார் வெளியாக நின்மலமாய் நிறைந்ததுஎன்பார் வரமமாங் கடந்தவெளி வழிதான்என்பார்
வாய்ப்பேச்சே அல்லாமல் வரைகாணாரே.
வரைகாணப் பூரணந்தான் ஒளியைச்சொல்ல மதியேது கதிரேது தீதான்ஏது நிரைகாணா நிரஞ்சனமாம் ஒளியைக்காண நிசமான கேசரியாய் நீட்டிப்பாரு புரைகாணாப் புல்லருக்கே ஒன்றும்இல்லை
புத்தியுள்ள சித்தருக்குப் பொருள்தான்மேலே உரைகாணா மூலத்தைப் பார்த்தால்என்ன உறுதிஇல்லாது உன்னியே ஊறிப்போச்சே.
