Pokar 7000 fist kandam manapperumai mavunayogam page no 24

 

Locker books




மனப்பெருமை மவுனயோகம்

மருவியே முந்திமுந்தி மூலம்நீதான் வாசிகொண்டு பாச்சியதில் மாட்டிஏறு உருவியே குதிரையின்மேற் கொண்டா யானால் உறுப்பான நாலைவிட்டால் எங்கும் இல்லை
அருவியே முன்பின்னும் கீழும்மேலும்
அழல்என்னத் தழல்என்ன மதிதான்என்ன கருவியே கண்கொள்ளாக் காட்சியாகும் கண்கொள்ளாப் போகத்தைக் கண்டிடாயே.
கண்டிட்ட மனத்தாலே தவமும்ஆச்சு கவர்ந்தஉயிர் ஆவதுவும் மனமேஆச்சு மண்டிட்ட வாயுமேல் மனமும்ஆச்சு
மகத்தான சஞ்சலத்தால் மனம்பேய்ஆச்சு
அண்டிட்ட தீப்போல மனந்தான்சென்றே
அகண்டத்தில் சென்றதென்றால் அதுதான்போதம்
மன்றிட்ட மனம் விட்டால் ஞானம் போச்சு
வாசியைத்தான் நழுவவிட்டால் யேரகம்போச்சு.
யோகத்தை விடாதேநீ மவுனமார்க்கம்
உற்பனமாய்ப் புத்தியுள்ளான் என்றுசொல்லிக்
காகத்தைக் காலாங்கி நாதர்தாமும்
கடாட்சித்து முன்னேதான் பிராணாயாமம் யோகத்தை முனிந்தபின்பு மொழிந்தசொற்கேள் முந்தினதோர் மூலத்தில் அகாரம்ஈசன்
தாகத்தை உகாரமது சத்தியாச்சுத்
தனித்துஇரண்டும் கூடுமது மவுனமாமே.





மவுனமாம் மூலத்தே முந்திமுந்தி மருவினால் பளிச்சென்று லிங்கம்காணும் நிவுனமாம் லிங்கமது நந்திநந்தி
நேராக எட்டு இதழும் விரிந்துகாணும் உவனமாம் அதைவிட்டுச் சுழிமுனையோடு ஓகோகோ நாதத்தில் மவுனமொட்டு சுவனமாம் அசைந்துநிற்கும் மவுனத்தாலே சேமசடை அசைந்தாட நடனங்காணே. காணப்பா மேலேறி ஆக்கினையின்உள்ளே கருத்தூணி மவுனத்தை தாக்கினக்கால் நீணட் னப்பா சதாசிவன்தான் நிருத்தம்செய்வார் நிலையாகச் சிவகாமி இருந்துபார்ப்பாள் ஆணப்பா அவ்விடத்திற் கலந்துநித்தம் அணுகினால் அம்பலத்தில் அடையலாகும் மூணப்பா விட்டதனை அறிவின்மூலம்
முதிர்ந்தேற வாசியின்தன் முறைமைகேளே.
முறைமையாய் அறிவுக்குள் மவுனம் ஊன்றி
முதிர்ந்து மனந்தேறுமட்டும் திறமாய்நில்லு திறமையாய் அறிவென்றால் எளிதோமைந்தா தெரிந்துநீ அறிகிறதும் அதற்குள்பாரு அறமையாய் அறிவினுடைய மூலங் கண்டால் அசடில்லை கர்ப்பூரத் தேகமாச்சு செறமையாய் ஆலயத்துச் சிவன்தான்வந்து திரட்டி அன்னம் கொடுக்கையிலே உண்ணலாமே.
உண்ணலாம் என்றுநித்தம் மூலத்துள்ளே
உறுதியாய் ஒவ்வொன்றாய் உரைத்துக்காணும் எண்ணலாம் இனத்தோட வரிசையோடும் ஏமாறல் இல்லாமல் எத்தியாடு கண்ணலாய் அட்சரத்தில் கருத்தைவைத்துக் கருதுகின்ற மந்திரத்தைச் செபித்தே உன்னு பெண்ணலாம் புலன்தன்னை அவரவர்கள்இருக்கும் பேரான வீட்டில்வைத்துப் பூட்டிப்போடே.




பூட்டிட்டு நாலாக வெளியின்உள்ளே
'புகழ்கின்ற சோதியைப்பார் பொருளேதோன்றும் கூட்டிட்ட ஒவ்வொன்றாய்க் கடந்து கூடு
கொள்கியதோர் மூன்றான வரையின்உள்ளே மாட்டிட்ட மேற்கண்ணின் மணித்தாயப்பா
மருவிநின்ற கொலுக்காணக் கண்ணுண்டோசொல் மீட்டிட்டு மேலானபதம் இதுதான்சென்றால் வேதாந்த முடிவான வெளியும்ஆச்சே.
ஆச்சென்ற வெளிஎன்றால் இருண்டவெளியல்ல ஆதியாம் உன்மனைத்தாய் விளக்காய்நின்றாள் ஓச்சென்ற ஒளிஎன்றால் ஒளியும்அல்ல
ஓகோகோ இருவருந்தான் ஒன்றிநின்றார் காச்சென்ற நிராகாரம் காணலாகும்
கண்டுடனே மனதூன்றிக் கலந்துபோகும் வாச்சென்ற விளக்கொளியில் விட்டில்வீழ்ந்து மாண்டதுபோல் மனம்சென்று மருவும்தானே.
மருவினால் முத்திமுத்தி மைந்தாகேளு
மற்றவெல்லாம் முத்தியல்ல மருவுமார்க்கம் புருவினால் மனஞ்செயித்தால் போக்கும்இல்லை பூணாட்டால் பேய்க்கூத்தாம் பொல்லாமாயை
உருவினால் யோகத்துக்கு இதுவேமார்க்கம்
உண்மையாய்ப் பார்த்தபடி உறுதிசொன்னேன்
இருவினால் இந்த முறை ஏத்துவாசி
ஏறாட்டால் யோகம்எல்லாம் இழுக்குஆம்தாளே.
தானான நாதாலி நின்றேஓங்கச்
சமர்த்தான பூரணத்தே சுழன்றுசெக்கு
வானான மனமிருந்த நிராகாரத்தை
வாய்திறந்து சொல்லுதற்கு நாமம்ஏது பானான நிற்குணமோ நிரஞ்சனமோகாணேன் பாங்கான கரையில்லாப் பதியோகாணேன்
நூனான மூலத்தே நின்றேஏறி
ஓடினேன் உற்பனத்தைக் கண்டிலேனே.



உற்பனமாம் பூரணத்தின் கரையோகாணேன் உயர்ந்துநின்ற சனகாதி நால்வர்காணார் விற்பனமாம் மூலகுரு தானுங்காணார் மேன்மையாம் சுகர்முதலாம் சித்தர்காணார் நிற்பனமாம் நிட்களத்தின் கரையைச்சொல்ல நிலையான வேதாந்தம் விளம்பக்காணேன் அற்பனமாம் மனமோடி அண்டிற்றுஆனால் அவ்விடத்தே லயித்துநின்று அழுந்தலாமே.
லயிச்சுநின்று அங்குஅழுந்துவதும் எவ்வாறுஎன்னில் அளவுமிஞ்சி வத்துஉண்ட ஆண்மைபோலக் கயிச்சுநின்று சொக்குவதும் எவ்வாறுஎன்னில் சோதியாம் அமிர்தம் உண்ட தூய்மைபோலக் குயிச்சுநின்று அங்குஅழுந்துவது எவ்வாறுஎன்னில் கோரக்கர் கற்பம்மிஞ்சுங் கூர்மைபோல
கயிச்சுநின்ற இம்மூன்றும் ஒப்புமல்ல ஏற்றமாம் ஆனந்த போதைதானே.
தானெங்கே பார்ப்பதென்றால் மூலம்பாரு
தருகுறும்பர் மிலேச்சருக்கும் காணும்சோதி ஆனெங்கே ஆதாரத் தளமுங்காணும்
அட்டான முப்பாழும் கடந்துகாணும்
கூனெங்கே தமர்வாசற்கு உட்புகுந்தால்
கோடிமதி கோடிரவி கூறொண்ணாது
பூனெங்கே பூரணத்தின் கரையோகாணோம்
புகுந்துடனே காந்தயம்போல் பொருந்துங்காணே.
பொருந்துவதும் எவ்வாறோ என்றுகேட்கில் பெருந்தீபம் உண்டதிரி நெய்யைப்போலும் வருந்துவது வருணசலம் ரவிஉண்டாப்போன் மகாஐந்து வண்ணம் உண்ட படிகம்போலும் தருந்துவது சலத்துஅடங்கும் குமிழிபோலும் சத்தமவன் கூப்பிட்டுக் கேட்டாப்போலும் ஒருந்துவதும் ஓங்குவதும் இதுவேமார்க்கம் உத்தமனே மனத்துடனே உன்னுஉன்னே.





உன்னுதண்மை ஞானத்துக்கு ஆதாரந்தானாச்சு உண்மையாம் சாந்தமல்லோ யோகச்சார்வு மன்னுவண்மை விவேகம்என்ற வாழ்வுமாச்ச
வாய்திறக்கா மவுனம்அன்றோ மனத்துக்குஇன்பம் தன்னும்உண்மை ஞானத்துக்கு ஓடும்வீதி நலிவில்லா திடமல்லோ மகத்தாம்வீரம் புன்னுமுண்மைப் பூரணமாம் பொறியைத்தள்ளு போக்கோடே மவுனத்தில் பூட்டிநில்லே.
நில்லாமல் மடவார்பால் மாயத்தூடின்
இதுதலையாங் கொள்ளிமையத்து எறும்புபோல்வாய் கல்லாமல் காமுகனாய்த் திரிந்திடாதே
கடிசான பாழாசை தொடர்ந்ததுஎன்றால்
வல்லாமல் விழிகண்டு வலையில்சிக்கி
மறந்துமே சமாதிவிட்டுச் சுழன்றாயானால் அல்லாம லொன்றுமில்லை நீயுங்கெட்டாய்
அதிட்டம்உனக்கு இல்லைஎன்று அறிந்துகொள்ளே.
கொள்என்ற யோகம்யார் பார்த்தார்என்றால் குணமான சூடாலை என்றபெண்தான் வள்ளென்ற மூலர்பிள்ளை சுவாலமூர்த்தி வண்மையாய் அவள்தனக்கு உபதேசித்தார் புள்ளென்ற வாசிஎல்லாம் போகொட்டாமல்
போக்கோடே குண்டலியில் கருத்தைப்பூட்டி வெள்ளென்ற வயதெல்லாம் விருத்தியாக்கி
விளங்கியே அரசனுக்கு அங்குஅருள்செய்தாளே.
செய்தவளைப் பெண் என்றே அறியான்மன்னன் செகத்துவசன் அவளாலே சேர்ந்தான்ஞானம் பைதவளப் பதினாறு யுகக்கற்பந்தான்
பரத்தோடே ஒன்றாகப் பரிந்துபோனார் தொய்தவளத் துலாபரமாம் யுகத்திற்றானும் சேர்ந்துமே இருவருந்தான் கலந்துபோனார் உய்தவள யோகியவ ளுதவும்பெண்தான் உத்தமியாம் பெண்ஆனால் அணையநன்றே.



அணையவே பெண்ணவர்க்கு வந்ததுஏதோ அதிகமாய் நால்யுகத்தில் செய்தவந்தான் பிணையவே பெண்ணான ரூபமாச்சு
போதித்த குருவாச்சு பெண்டிராச்சு பணையவே பழக்கமுற்றார் பெண்ணினோடே பரவியே மூலமாம் உறுதியோகம் கணையவே பெண்ணைவிட்டால் ஆகாதுஎன்னில் கனவாலே காயப்பெண் கலவாள்பாரே.
கலந்துமே விண்ணானது உறுதிஎன்றார்
காமமாம் பெண்ணைவிட்டு நீங்குநீங்கு அலந்துமே காலாங்கி ஐயர்தாமும்
அடித்துமே பெண்ணாசை தள்ளிவிட்டார் புலந்துமே பிள்ளைகளை வெவ்வேறாகப் போய்எங்கும் திரியும்என்று விடையும் ஈந்தார் கலந்துமே கருவூரார் தெற்கேசென்று
கடியரிடி கையில்சாபங் கொண்டிட்டாரே.
கொண்டுபின்பு தான்போதும் அப்பாஎன்று கொடிதான காந்திமதிக் குள்ளேசென்றார் எண்டுமெனை ஆண்டகா லாங்கிநாதர் ஏகவெளி அம்பலத்தே ஏகிநின்றார் பண்டுபரா பரனார்தன் கடாட்சத்தால்யான் பாய்ந்துமே விண்ஏறி இறங்கிவந்தேன் மண்டுமணித் தாயோடு பழக்கமாகி
மனம் ஊன்றித் திரும்பிவந்தேன் மக்காள்பாரீர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்