Pokar 7000 fist kandam marupiravi ellamai page no 23

 

Locker books





மறுபிறவி இல்லாமை

நேராது என்றேசொல்லிச் சிவயோகிதானும் நிலைத்துன்னிப் பரையளவும் ஓடினாலும் காரான பிறவிவந்து எய்தும்எய்தும்
கருவில்வந்து பிறந்தாரும் சிவயோகியாவான் பாரான பரையளவும் புரியட்டமாச்சு
பண்பான பரைகடந்து வெளிப்பாழ்உற்றால் ஆரான வெளிப்பாழே அகண்டம்என்றே அர்ச்சித்துப் பார்த்தாக்கால் பிறக்கொட்டாதே.
ஏதென்று பிறக்காமல் அதற்குள்ளேநின்று இன்னமொரு வரைஏறி இதுதான்என்பான் வாதென்று அதற்குள்ளே மயங்கிஏங்கி
மற்றுமொரு வரையேறி இதுதான்என்பான்
தீதென்று மூன்றுவரை நிறந்தேஏறிச்
சேர்ந்துநின்ற உன்மனையை இதுதான்என்பான்
பாதென்று ரவிகோடி வன்னிகோடி
பரிவான மதிகோடி பரிந்துபாரே.
பரிந்துபார் முதற்பாழில் பூதம்பூதம்
பரிவாகச் சித்தித்தால் வாதியாவன்
எரிந்துபார் இரண்டாம்பாழ் அடுத்திட்டக்கால்எட்டு
எட்டால் அறுபத்து நாலாம்சித்தன் முரிந்துபார் மூன்றாம்பாழ் புகுந்திட்டக்கால் மூச்சான வாசியது பிறந்ததானம் நரிந்துபார் நாலறிந்து போனஇடம்கண்டால் நமன்நடுங்கிப் போனஇடம் நாட்டிடாயே.
நாட்டியே நிராதாரம் தன்னில்சொக்கி
நலமாகக் குழைந்துள்ளே புகுந்தாயானால்
தாட்டியே நான்என்ற நாமம்போச்சு
சாத்திரத்தால் ஆராய்ந்த பொருளும்போச்சு சூட்டிப்பார் சுழுத்தியைப்போல் உறக்கமாச்சு தூங்குவார் மாடுபோ லொன்றுங்காணார் தாட்டிப்பார் சடம்போகா சுழுத்தியினிற்புகுந்தால் தனித்தசிவன் போல்வாழ்வாய் நீயுங்காணே.




காணவே ஆடியதோர் கூத்தைப்பார்த்துக் கருத்து உறைந்த பின்புதான் வாதம்பாரு பாணவே ஆதாரம் ஒக்கவேறு பரதத்தில் ஆடியதோர் கூத்தும்காணும் நாணவே வாசியுடை நட்பைக்கண்டால் நடனமாம் கூத்ததுவும் கண்முன்காணும் தாணவே நடனத்தின் கூத்தைக் கண்டால் தடித்ததோர் சாவதுவும் பொய்யாப்போமே.
போமென்று சொன்னஆறு ஆதாரத்தில் போக்கான தளத்தில்நிற்கும் அட்சரம்தான் மென்ற ஐம்பதும் அட்சரமேஆயிற்று அப்பனே ஒன்றெங்கே காணோம்காணோம் ஆமென்ற ஆசானை அடுத்துக்கேளாய்
அஃதறிந்து சொன்னாக்கால் குருவேயாகும் நாமொன்றும் அறியோம் என்று உரைப்பானாகில் நலமான இரண்டுங் கெட்டநாதனாமே.
நாம்என்றே போகிறதும் வருகிறதும்இரண்டாம்
நலமான ஓர்எழுத்து எங்கேஎன்றால் போமென்ற குருபதத்தில் ஐக்கியமாகக் கூட்டியே மருவிநின்று ஹம்என்றாகி
வாமென்ற வாசியினால் சிகாரமாகி
வாசியொடு ஒன்றியே சிங்என்றாச்சு
தேகமென்ற ஓர்எழுத்தால் வாசியாச்சு
சிவனாச்சு சடமாச்சு அங்குஅண்டமாச்சே.
ஆச்சென்ற ஓர்எழுத்தால் கோபமாயிற்று அகாரஉற் பனமும்ஒடுங் கினமுமாயிற்று ஓச்சென்ற எழுத்தாலே ஒளியுமாயிற்று
உள்ளடங்கச் சோதியைப்போல் நந்திநந்தி தேச்சென்ற எழுத்தடங்கில் சோதிகாணும்
தேகமுமோ விளக்கொளியாம் சிந்தையில்லை
தாச்சென்ற சந்திரசூரியரும்ஒன்றாம்
தயங்காதே சுழிமுனையில் பேணிக்கூடே.






கூடுவது முப்பாழும் மூன்றுவீதி
குறிப்பாக மூன்றையுநீ கூடிச் சொக்கு நாடவே நாலுக்குள் அடங்கும்பாரு
நலமாக ஏணிபழு வாகக்காணும்
ஏடவே தளத்தோடே எழுத்தைப்பாராய் ஏறினால் முப்பாழும் கடந்துபோகும் பாடவே பராபரத்தில் மனோன்மணியாம்தாயும் பரிவான அமிர்தந்தான் பாலிப்பாளே.
பாலிப்பாள் அதுகடந்தால் நிராதாரம்தான் பார்த்துமே தெளிந்தபின்பு பரந்தேஏகில் போலிப்பாள் தெளிவான போதம்போதம்
பொய்க்காத என்குருவும் அதற்குள்சென்றார் ஏலிப்பாள் அதுகடந்து அங்குஏறிப்போனேன் இளைப்பாறி இதுகடந்தே அந்தத்தேறில் சூலிப்பாள் சிலம்பொலியில் புகுந்திட்டேன்யான் சுகமெல்லாம் காலாங்கி ஐயர்க்காச்சே.
ஐயரென்ற காலாங்கி நாதனார்தான்
அறியாத சிறியோற்கும் அறிவுதந்தார் உய்யரென்ற உடல்பொருள் ஆவியுந்தான்மூன்றும் உதகத்தால் கொண்டவர்க்குப் பலன்தான்என்றேன் செய்யரென்ற சிலம்பொலிக்குள் அவரும்வந்தார் சிரசுவைத்தே அவர்பதத்தில் சரணம்செய்தேன் எய்யரென்ற எனைஆண்டு ஞானம்காட்டி
ஏழ்மையாம் சஞ்சலத்தை ஓட்டினாரே.
சஞ்சலத்தை ஒட்டியே வாதம்காட்டிச்
சார்ந்திட்ட எனை ஆண்டு குளிகைகாட்டி.
சஞ்சலத்தில் வாசிஎன்ற குதிரைகாட்டி
மனமடக்கிப் பூரணத்தின் அந்தம்காட்டித்
தெஞ்சலத்தில் சித்தரெல்லாம் பணியக்காட்டித்
தேசிகாரம் என்குருவும் நடனத்தெய்திக்
கஞ்சலித்துக் கண்களித்தேன் கருணைகூர்ந்தேன்
கருணைமைந்தா என்றுஉரைத்துக் கடாட்சித்தாரே



ஆரேஐம் புலன்அறுத்தால் மனமும்ஒன்றாச்சு அதிகமனம் வாயுஎனப் பூசித்தோங்கு போரென்ற வாயுமேல் மனந்தான்ஏறிப்
பொறிகடந்து நெறிகடந்து போகும்தாண்டிக் கூரென்ற ஆற்றோடு குளபதமும்தாண்டிக் கொடிதான முப்பாழின் போக்கும்தாண்டி மாரென்ற மணித்தாயைச் சரணம்பண்ணி வைத்துப்பார் நாலுக்குள் மருவிப்பாரே.
]

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்