முப்பாழ்
நிற்பார்கள் பரைமேலே முப்பாழ்கேளு
நீங்கியொன்று வெளிப்பாழாம் அதற்குமேலே ஒற்பார்கள் ஒளிப்பாழாய் நிற்கும்பாராய்
உயர்ந்துமேல் அதைத்தாண்டி உரைக்கக்கேளு விற்பான வெளிஒளிப்பாழ் விரைந்துபாரு மிகுமூன்று வரைதாண்ட உன்மனைத்தாய் தற்பான மொழியுடையாள் தமரின்வாசல் தனிப்பரந்தான் போதமதாய் நிற்பாள்பாரே.
போதமது தான்என்றும் அவட்கேபேராம் பேரான அகண்டமென்று அவட்கேபேராம் சேதமென்றது அவளடுக்க அவளேபோதம் சேர்ந்தணுகில் தமர்க்குள்ளே சேரலாகும் ஆதமது கண்டவர்கள் கண்டவீடு
ஆதியில்லை அந்தமில்லை அறியப்போகார் நேதமது போதமது என்னலாகும்
நேரரிது மனக்குரங்கு நேரொட்டாதே.
