புரியட்டகம் (நுண்ணுடல்)
வாஎன்ற சடமெல்லாம் பிரமன்கூறு மறைந்துநின்ற இரத்தம் சீழ்மாலின்கூறு போஎன்ற இவைக்குள்ளே புரியட் டந்தான் பேரானசூட்சம் என்ற தேகம்கேளு சேவென்ற சிகரமாம் சிவன்தான்ஒன்று
சேர்ந்ததுமேல் வகாரமாம் மகேச்சுவரன்தான்ஒன்று தாவென்ற யகாரமாஞ் சதாசிவன்தான்ஒன்று சார்ந்துநின்ற விந்துவதின் மேலும்ஆமே.
மேலான விந்துவின்மேல் நாதம்என்று மிக்கவே அதன்மேலே சத்திஒன்றாம்
ஓலான இதன்மேலே சிவன்தான்ஒன்றாம்
உற்றசிவம் யாரென்னில் வராட்டியன்தான் பாலான அதின்மேலே பரைதான்ஒன்று
பகருமிவை எட்டல்லோ புரியட்டந்தான் மாலான இவையெட்டால் பிறப்பிறப்பாச்சு வாகான புரியட்ட மார்க்கந்தானே.
மார்க்கந்தான் புரியட்டக் கூத்தேகூத்து
மகத்தான கோடிசென்மம் எடுத்தேஆடும் ஏர்க்கந்தான் புரியட்டத்து ஏழுவகைத்தோற்றம் எங்குமது விரிந்தாடப் பிரபஞ்சமாச்சு பார்க்கத்தான் புரியட்டப் பகவான்கூத்துப் பண்பாக இதைஅறிந்து கூர்ந்துபாரார் தீர்க்கந்தான் பார்த்தறிந்து பெரியோர்தாமும் திறந்தோடே தள்ளியதன் மேநிற்பாரே.
