மனித உடலில் விஷம் ஏறியபின் அல்லது விஷம் தாக்கிய பின் கீழ்க்கண்ட முறையை சரியாக பின்பற்றினால் விஷம் தாக்காமல் காப்பாற்றிக்கொள்ளலாம் ,அல்லது விஷமானது அதிகமாக தாக்குவதில் இருந்து தப்பித்து விடலாம் .
அனைவரும் உபயோகிக்கும் வித மாக எளிய முறையில் எளிய பொருட்களை கொண்டு எந்த ஒரு விஷத்தையும் முறியடித்து விடலாம்...
கவனமாக படிக்கவும் ...
முதலுதவி :
1 ) முதலில் விஷம் கடித்த இடத்தில் சிறிய கத்தியை கொண்டு கடித்த இடத்தின் மேற்புறத்தில் ஒரு உறுதியான கயிற்றை எடுத்து இறுக்கமாக கட்டவும் .இத செய்வதன் மூலம் விஷம் கடித்த இடத்தில் இருந்து இரத்த ஓட்டமானது மற்ற இடத்திற்கு பரவாமல் தடுக்கலாம் .முடிந்தால் விஷம் கடித்த இடத்தை கத்தியால் உடலின் மேற்புற தோலை கிழித்து விடுதல் நல்லது .
2) மூன்று காந்த மிளகாயை பொடி பொடியாக நறுக்கி அவற்றை நன்றாக தூளாக அரைக்கவேண்டும் அதாவது மிளகாயை தூளாக்கிக்கொள்ளவேண்டும் .எடுத்துக்கொள்ளும் மிளகாயானது நாட்டுமிளகாயாக இருப்பதுடன் நன்கு காய்ந்த மிளகாயாக இருக்க வேண்டும் .
3) பிறகு இரண்டு வெற்றிலையை எடுத்துக்கொள்வேண்டும் .எடுத்துக்கொள்ளும் வெற்றிலையானது காயாமலும் வாடாமலும் இருத்தல் அவசியம் .வெற்றிலை பச்சை நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.வெற்றிலையானது
பெரிய அளவிலும் இல்லாமல் ,சிறிய அளவிலும் இல்லாமல் நடுத்தரமான அளவில் இரண்டு வெற்றிலைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் .
4) எடுத்துக்கொண்ட வெற்றிலையின் மீது தூளாக செய்த மிளகாய் தூளை வைத்து நன்றாக வெற்றிலையை மடித்து வாயில் போட்டு நன்றாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக மென்று அதைன்பின் முழுங்க வேண்டும் . இவ்வாறு செய்வதன் மூலம் நன்றாக மிளகாய் மற்றும் வெற்றிலையானது உரைக்கும். ஒருவேளை உரைக்க வில்லை என்றால் விஷம் நன்றாக உடம்பினுள் கலந்துவிட்டது என்று அர்த்தம் .நன்றாக உரைத்தால் விஷம் முறிவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
முக்கிய குறிப்பு :
மேற்கண்ட செயல் முறையினை செய்த பின் சர்க்கரை மற்றும் இனிப்பு புளிப்பு சுவையில் எதையும் உண்ணுதல் கூடாது . அவ்வாறு செய்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்பதை முக்கியமாக தெரிவித்து கொள்கிறேன் ...

