ஆசனத்தில் அப்யாசிக்க முறை
உன்னவே அகாரமும் ஐம்பத்தொன்றும் உறுதியாம் பதினாறில் பிரிந்ததப்பா பன்னவே அகாரமஃது ஈசனாச்சு
பதிக்கடுத்த வார்தீகம் சக்தியாயிற்று என்னவே இப்படியே பதினாறுஈச்சுரமும் ஏற்றமாம் சிவசக்தி யாகிநின்று முன்னவே இதனாலே முப்பத்தைந்தாச்சு மூவுலகு ஓர்எழுத்தாக முகிந்தவாறே.
முகிந்த ஐம்பத்தோர்எழுத்தால் வேதமாச்சு முக்கியமாய் புராணம்சாத் திரங்கள்எல்லாம் விகிந்தபின்பிடி இதற்குள்ளே விரிந்ததுஅப்பா மிக்கசச்சி தானந்தம் விரிவினாலே நகிந்தபின்பு நதிகள்எல்லாம் சமுத்திரத்தில் நகர்ந்தாப்போல் பூரணத்தில் லயித்துப்போகும். ஓகிந்தபின்பு ஒன்றுமில்லை நீயுமில்லை ஓங்கியதோர் நானுமில்லை ஒளிதான்காணே.
ஒளியான வாசியைத்தான் உன்னிக்கொண்டே உருண்டாலும் புரண்டாலும் முன்னுமூலம் அளியான ஆணிஅடித்தாற் போல்கூடும்
அப்போதோர் விக்கினமும் அணுகிடாது குளியான முழங்கால்மேல் குதிகால்போட்டுக் கொடுஞ்சுருக்காங் கோமுகாச னத்தில்கூடு வெளியாக வலுத்தக்கால் வலக்கால்மேலே விபரமாம் வீரஆச னத்தில்கூடே.
ஆசனத்தில் கூடையிலே வாசனைகள் தீண்டில் அடித்தொடைமேல் இரண்டான பதத்தைவைத்து பாசனத்தில் நிற்பதுமா சனமாய்க்கட்டிப் பதிலாக நுனிமூக்கைப் பற்றிப்பாரு ஆசனத்தில் சுழிமுனையில் வாசிகூடும் மருவுகின்ற வாசனைதான் ஓடிப்போகும் ஏசனத்தில் இதுமார்க்கம் தாயைக்கண்டே இருக்கலாம் பூரணத்தில் எய்தலாமே.
எய்தினால் சிவயோகி ஞானிஆவான்
இறுகியே வாசியெல்லாம் உடலில்சேரும் ஐதினால் மூலத்தில் ஒளியேவீசும்
ஆறுதலக் கிரந்தியெல்லாம் அற்றுப்போகும் கொய்தினால் கும்பகத்தே மிதக்கலாகும் கொடிதான தணலாலே அசைக்கப்போகா மைதினால் வாயுவென்ன மசகமாச்சு
மத்தந்த சித்தருகங் கண்டவாறே.
வாறான மூலத்தே அவ்வெண்றூணு
மருவியபின் முனைகொண்டா லங்ஙென்றூணு பாறான பளிச்சென்றால் சிங்ஙென்றூணு பற்றியே மூன்றுவகை காணும்காணும் ஈறான பளிச்சென்றால் சிங்ஙென்றூணு
மிரளாதே மனமுள்ளே சாரவூணு ஆறான ஆலம்உண்ட சிவன்முக்கண்போல் அடங்காத தீயொளியை அழுந்திப்பாரே.
தீயொளிதான் பளிச்சென்றால் பிரண்டையிலேஊது தித்தித்தால் யோகமங்கே சித்தியாச்சு கூயொளிதான் கும்பகமும் முனைக்கேஏறாது கொடிதான் வாய்அங்கே மவுனமாகும்
சாயொளிதான் சமைப்பதற்குத் தீயும்வேண்டாம் சமர்த்தான சிகாரத்தை ஊதப்பற்றும்
சூயொளிதான் சுழுத்திநெடும் பாதை ஓடச் சுளுக்காக இம்முறையே ஆடிப்பாரே.
ஆடியங்கே பார்ப்பதற்கு முறையைக்கேளாய் அடைவுஎல்லாம் சொல்லுகிறேன் அறிந்துகொள்வாய் ஈடியங்கே இடைகலையில் பூரித்தேநின்று எழிலாக மூலத்தே நினைவாய்க்கும்பி நீடியங்கே பிங்கலையின் உள்ளேரேசி நேர்ப்பாக நேர்ப்பாகவா ஏறிவாநீ நேடியங்கே உறைந்தக்கால் சுத்திநாடி திறமான வாதபித்த சிலேத்துமம்போமே.
திறமான மூன்றுவகை நோயும்வெந்து
சித்தியாய்க் காயந்தான் இறுகிநன்றாய் நரமான நல்வினையும்தீ வினையுநீறும் நலியான ஐம்புலனும் விரைந்துபோகும் உரமான ஓங்கார நாதம்மேலே
ஒருகோடி இடிபோல ஓங்கும் ஓங்கும் அறமானது இப்படியே அளைந்துகண்டேன் அறிந்துமே நீயும் அப்படிதான்பாரே.
பாருநீ அவ்ஒன்றால் உவ்வும்கூடும்
பரவியதோர் மகாரமதில் சேர்ந்துநின்றால்
ஊருநீ பளிச்சென்றால் நந்திகாந்தி
இதுகாணும் பிரசாதம் என்றமார்க்கம்
நாருநீ பளிச்சென்றால் நந்திகாந்தி
நயமாக இதனோடே வாசிசேரு ஆருநீ அட்சரமும் மகாரத்தோடே
அமர்ந்தவாசி கள்இரண்டும் நாதம்விந்தே.
நாதம் என்றும் விந்துஎன்றும் வாசிக்கேபேராம் ரவிமதியும் சிவசக்தி அதற்கேபேராம் நீதம்என்றும் பூமிஎன்றும் அதற்கேபேராம் . நிலையான வேதம்என்றும் அதற்கேபேராம் வாதமென்றும் வசியம்என்றும் அதற்கேபேராம் மனம்என்றும் போதம் என்றும் அதற்கேபேராம் காதம்என்றும் தூரம்என்றும் அதற்கேபேராம் கண்ஒளியாய் நின்றஇவை இரண்டுந்தானே.
ரெண்டையுந்தான் உற்றுற்றுப் பார்க்கபார்க்க நிரையற்று முறையற்றும் உணர்வுஅற்றுந்தான் அண்டையும்தான் அற்றற்றும் போனஎல்லாம் அடங்கிற்று அங்குஉட்குந்தே அந்தநாளில் திண்டையுந்தான் சித்தொத்துத் தெளிவும்ஒத்துச் செயலற்று நிட்களமாய்க் காணும் பண்டையுந்தான் பற்றற்ற சித்தர்க்குஆத்தாள் பலித்திடுமே என்றுசொல்லிப் பகர்ந்திட்டாளே.
பகர்ந்திட்ட வாசிஅஃது என்றபேச்சுப்
பண்பான வாய்க்குமெத்த எளிதோசொல்லு சிகர்ந்திட்ட தேசிதான் ஞானதேசி
சேர்ந்திதைத்தான் மனமொத்தே ஏறுவோர்க்குப்
புகர்ந்திட்ட புருவத்தில் நின்றே ஆடும்
பொருளான மனோன்மணியாம் பெண்ணைப்பாராய்
இகர்ந்திட்ட காசிகங்கை யமுனைமூன்றும்
ஏகமாய்க் கண்டிடுந்தான் புருவம்என்னே.
