சமாதி உத்தி
இருத்தியே பாரெனவே என்னைஆண்ட ஏற்றமாம் காலாங்கி நாதர்தாமும்
பருத்தியே பக்குவம்பார்த்து எனக்குச்சொன்னார் பாரென்றார் வாசியைத்தான் பூரணத்தில்லயிக்க மருத்தியே கண்இமைக்குள் வாயில்வந்துகலக்கும் மருவுஇரண்டும் பிறந்துஇறந்த வித்துஇதுஎன்றார்
மறுத்துமே மவுனத்தை விடாதேஎன்றார்
மகத்தான இவைஇரண்டும் பிறப்புமாச்சே
பிறவாமல் ஞானத்தில் கூடுகூடு
விரத்தியாம் தூரம்அல்ல புகழ்ந்தநாளம் மறவாமல் எந்நாளும் வாழ்வாய்நீதான் மாசற்ற நாளம்பார் சரமொடுஓது கரவாமல் கண்டத்தே கருத்தைவைத்துக் கடிந்துமே ஓடுவதைக் கடுகிப்பாரு தவறாமல் கைக்கனிபோல் நாலும்தோற்றம் நாதாந்த மணித்தாயும் அழைப்பாள்பாரே.
பார்என்ற நாலையே பார்க்கஎன்றால்
பண்பான வகைஎல்லாம் சொல்லக்கேளு காரென்ற காலையே மாலைவேண்டாம்
கூடியதோர் கூட்டங்கள் கலக்கம்வேண்டாம்
நாரென்ற நிசியான நடுச்சாமத்தில்
நலங்காமல் அசைவற்றே இருந்துபாரு
கோரென்ற கோலத்தைக்
元
டிப்பார்த்துக்
குமிழியாம் தலத்தில்நி] குறித்துநோக்கே.
நோக்கியே நிலைத்துநின்ற கண்டத்துள்ளே
நுட்பமாம் அட்சரம் பதினாறுதன்னில் ஓக்கியே ஒன்றிநின்றால் உயிரேஆகும்
உள்ளாறில் வகாரநிற்கும் சாவுபொய்யாம்
தாக்கியே கைக்குவிட்டால் நான்கும்காணும் நால்வீதி தனில்நின்று வாசிஓட்டி
மூக்கியே தாய்காண்பாள் மூன்றாம்வீதி
முப்பாழ்எல் லாம்வெளியாம் முன்பின்ஆமே.
பின்னாகப் புக்கிஇரு என்பாள்தாயும்
போந்தமொழி இருஎன்ற சொல்லைக்கேட்டு முன்னாகக் குதிரையையான் பார்த்தேன்காணோம் மூலமாம் ஆதாரத் தளங்கள்காணேன் கொன்னாகக் குருஎன்ற மொழியும்காணேன் குறித்திட்ட பொறியோடு நெறியும்காணேன் மன்னாக மருஎன்ற தாயும்காணேன் மட்டற்ற போதத்தில் உன்னிஉன்னே.
