Pokar 7000 fist kandam thaththuvalaya samathi page no 30

 

Locker books



தத்துவலய சமாதி

உன்னியே சமாதிஐந்தில் ஊறுதிகேளு உவப்பான நத்துவலய சமாதிநின்று முன்னியே தத்துவங்கள் முப்பத்திஆறு
முனிந்தகலாத் தூல மவுதிகத்தைத்தானும் துன்னியே சூக்குமத்தில் தான்அடக்கி
சூக்குமத்தை நம்பெரிய வாசனைபோல்ஆக்கிக் கன்னியே காரணமாம் சரீரத்தில்அடக்கிக் கருதிஇதைப் பிரகிருதியிலே கலக்கப்பண்ணே.
கலக்கவே புருடனையும் அதிட்டானமாகக் கலந்துநின்ற சைதந்நிய மாகக்கண்டே உலக்கவே கரைத்தளித்து அங்குஒன்றேயாகி உள்அறையில் காற்றசையா விளக்குப் போல அலக்கவே அலைச்சல்அற்றுத் தானேதானாய் அகண்டம்என்ற பூரணமாய் நின்றுபின்னை துலக்கவே தோற்றமற்று இருப்பத்தானே சுத்தமாம் தத்துவலய சமாதிஆச்சே.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்