முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க மற்றும் முகம் பளபளப்பாக என்ன செய்வது

 

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ,பருக்கள்,கொப்பளங்கள் ,முகம் வறட்சி ,முகத்தில் எண்ணெய் போன்று வடிதல் ,முகமானது வழுவழுவென ஆவதற்கு கீழ்க்கண்ட முறையினை பின்பற்ற வேண்டும் .



சிறிது அளவு கேரட்  சிறிது அளவு முட்டைகோஸ் ,சிறிது அளவு தக்காளி இவை மூன்றையும் ஒரே அளவு எடுத்துக்கொண்டு இவை மூன்றையும்  ஒன்றாக சேர்த்து நன்றாக அரைக்கவேண்டும் .அரைக்கும் முறையானது கூலாக அல்லது மாவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.


muttaikos




 முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு இரண்டு நிமிடம் ஆனபின்பு அரைத்து வைத்துள்ளதை முகத்தில் நன்றாக தேய்த்து தடவிக்கொள்ளவேண்டும். பின்பு தடவிய நேரத்தில் இருந்து சரியாக அரை மணி நேரம் ,அல்லது ஒருமணி நேரம் வரை காய விடவும் .இதை நீங்கள் ஒரு இரவு முழுவதும் கூட காய விடலாம் .முகம் லேசாக இழுத்து பிடிப்பது போல உணர்ந்தாள் காய்ந்து விட்டது என அர்த்தம் .



இருப்பினும் சரியாக அரைமணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவிவிடவம் .இதே போல் இரண்டு இரண்டுவாரம் செய்தால் முகத்தில் உள்ள பருக்கள் ,கரும்புள்ளிகள் ,கொப்பளங்கள்,இல்லாமல் போவதுடன் முக்கால் பளபளப்பாகவும் மற்றும் நல்ல கலராகவும்,வழுவழுப்புத்தன்மையுடைனும் இருக்கும்.



 நம் அன்றாட உணவில் கேரட், முட்டைக்கோஸ் ,தக்காளிகளை பச்சையாக சாப்பிட்டுவந்தால் முகம் பளபளப்பாகவும் ,வளவழுப்புத்தன்மையுடனும் இருப்பதுடன் மட்டுமல்லாமல் ,முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ,கொப்பளங்கள் ,பருக்கள் ,ஆகியவற்றை வரவிடாமல் தவிர்க்கலாம்       






                 










             ...நன்றி ...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்