முடி நீளமாக வளர என்ன செய்வது (1 மாதத்தில் நீளமான முடி )

 கீழ்கண்ட முறையை பின்பற்ற உங்களுக்கு முடியானது எவ்வளவு   சிறியதாக ஒரு மாதத்தில் உங்கள் முடியானது நீளமாக வளர்ந்துவிடும் .

mudi neelamaaga valara


செய்முறை :


   முதலில் மருதாணி இலை ,செம்பருத்தி இலை ,செம்பருத்தி பூ ,மற்றும் கருவேப்பிலை இலை, இவை அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும் .அறைக்கும்பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் மிகவும் சிறிதளவு மட்டுமே சேர்த்துக்கொள்ளவேண்டும் .இம்முறையில் தண்ணீர் சேர்க்காமல் அரைப்பது மிகவும் நன்று .இவை அனைத்தையும் நன்றாக மற்றும் கெட்டியாக அரைத்துக்கொள்ளவேண்டும் .அரைத்தபின் சிறு சிறு உருண்டையாக உருட்டி அந்த உருண்டையை மிதமான வெயிலில் காயவைக்கவேண்டும் .நெருப்பிலோ ,பாத்திரைத்தை சூடேத்தியோ காயவைக்க கூடாது .மிதமான வெயிலில் இரண்டில் இருந்து மூன்று நாட்கள்வரை நன்றாக காயவைக்க வேண்டும்.

maruthaani


மருதாணி இலை ,செம்பருத்தி இலை ,செம்பருத்தி பூ,கருவேப்பிலை இவை அனைத்தும் சேர்ந்த உருண்டையானது நன்றாக காய்ந்தபின் ,காய்ந்த உருண்டைகளை எடுத்து சுத்தமான தேங்காய் எண்ணையில் சேர்த்து வைத்துக்கொள்ளவும் .தேங்காய் எண்ணையில் உருண்டைகளை சேர்க்கும் பொழுது கரையாமல் இருக்கும் ,இப்போது உருண்டைகள் நன்றாக காத்திருக்கின்றன என தெரிந்துகொள்ளலாம்.

karuvepilai


தேங்காய் எண்ணையில் உருண்டைகளை சேர்ந்தபின் மூன்று நாட்கள் நன்றாக ஊறவிடவும்.மூன்று நாட்களுக்கு பிறகு தேங்காய் எண்ணையின் நிறமானது மாறியிருக்கும் .இனிமேல் இந்த எண்ணெயினை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திவரலாம் .இந்த முறையினை பயன்படுத்தும் பொழுது எந்த ஒரு ப க்கவிளைவும்  வராது .இதை ஆன் பெண் இருபாலரும் பயன்படுத்தலாம் .

sembaruthi


இவாறு பயன்படுத்திவர உங்களின் முடியானது நீளமாக மற்றும் அடர்த்தியாக வளருவதுடன் நீங்களும் ஆரோக்கியமாக குளிர்ச்சியுடன் இருப்பீர்கள் .

இம்முறையினை பயன்படுத்துவதன்மூலம் சிலருக்கு ஓரிரு வாரங்களில்  முடியானது வளரக்கூடும் ,சிலருக்கு ஒரு மாதகாலம் ஆகலாம் .ஆனால் கண்டிப்பாக முடியானது நல்ல ஒரு வளர்ச்சியினை தரும் .



உங்களுக்கு இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் மற்றும் தகவல் தேவைப்பட்டால் எங்களை தொடர்புகொள்ளலாம்.


support@mobailbook.com


நன்றி ...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்