தெய்வ நம்பிக்கை உண்மையா? பொய்யா?

 தெய்வ நம்பிக்கை

  நம் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் பொழுது நமக்கு சிரிப்பு என்றால் என்ன என்று தெரியாது, ஆனால் பிறந்தவுடன் சிறுத்திருப்போம், அழுகை என்றால் என்ன என்று தெரியாது, ஆனால் அழுது இருப்போம். நம்மளை நடக்க கற்றுத் தருவதும் பேச கற்றுத் தருவதும்  உணர்ச்சிகளை கற்றுத் தருவதும் நமது தாய் மற்றும் தந்தை ஆவார். அதுபோல பிறந்தவுடன் நமக்கு தெய்வம் என்றால் என்ன என்று தெரிவதில்லை. தெய்வ நம்பிக்கை என்றால் என்ன என்றும் தெரிவதில்லை, நம் தாய் சிரித்தவுடன் நாம் எவ்வாறு சிரிக்கின்றமோ, நம் தாய் ஏதேனும் ஒன்று கூறும் போது நமக்கு புரிகிறதோ அவ்வப்போது தெய்வ நம்பிக்கையை உணர்கிறோம். அதாவது நம் தாய் தந்தையர் கடவுளிடம் கை கூம்பி வணங்கும் பொழுதும் கடவுளை பற்றி நினைத்து ஏதேனும் ஒரு பூஜைகள் நடத்தும் பொழுதும் இது என்ன என்று நம்மளே சோதித்துக் கொள்ளும் பொழுது அந்த சிறு வயதிலேயே நமக்கு தெய்வம் என்றால் என்ன என்று தாய் தந்தையரின் மூலமாக தெரிய வருகிறது. மற்றொருவர் பக்தியாக இருப்பதையும் மற்றொருவர் கடவுளை வணங்குவதையும் நம் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது கடவுளின் சிலையை பார்த்து இது என்ன அப்படி என்று தாயிடமோ, தந்தையிடமோ அல்லது வேற ஒருவரிடமும் கேட்கும் பொழுது அவர்கள் இதுதான் கடவுள் என்று கூறி இருப்பார்கள் அவ்வப்போதே சிறிது சிறிதாக கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு கடவுளின் மீது நம்பிக்கை மற்றொருவர் மூலமாக வருகிறது. மற்றொருவர் நம்புவதை வைத்து தான் அந்த சிறு வயதில் நாமலே நம்பி இருப்போம். கடவுளே பார்த்து கும்பிடு என்று தாய் தந்தையர் கூறும் பொழுது நாம் இரு கரங்கள் கூப்பி கும்பிட்டு கடவுளே வணங்க கற்றுத் தருவதும் தாய் தந்தையரே. இவ்வாறு இருக்கும் பொழுது கடவுள் நம்பிக்கை என்பது பொய்யல்ல. நமக்கு எப்படி நம் தாய் தந்தையர் கடவுளை பார்த்து இதுதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்தார்களோ அதே போல நம் தாய் தந்தையர் அவர்கள் தாத்தா பாட்டிகள் நம் தாய் தந்தையருக்கு இதுதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்திருப்பார்கள். இவ்வாறு பரம்பரை பரம்பரையாக கற்றுக் கொடுத்து கடவுளின் மீது நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டு  பக்தியாக மாறுகிறோம். நம் தாய் தந்தையர் கூறுவதில் பக்தி வந்து விடாது. நம் தாய் தந்தையர் அல்லது வேற ஒருவர் கடவுளைப் பற்றிய ரகசியங்கள் மற்றும் வரலாற்றினை கூறும் பொழுது அதாவது இந்த கடவுள் இப்படித்தான் உருவாகினார் என கடவுளின் வரலாற்றை கூறும் பொழுது அந்த வரலாற்றில் இருந்து நமக்குள்ளே மனதின் நம்பிக்கையில் இருந்து ஒரு தோன்றும் வெளிப்பூர்வமான உணர்வானது பத்தியாக மாறி நிற்கிறது. அந்த பக்தியானது நம்முள்ளேயே அடைந்து கடவுளை நம்ப வைத்து நமக்குள் சில தனிப்பட்ட உணர்ச்சிகளை எழுப்பி அதை உண்மையாக தெய்வ நம்பிக்கையாக தோன்றுகிறது.

தெய்வ நம்பிக்கை


 கடவுள்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் கடவுள்களின் கதைகளை ஏதேனும் ஒரு படத்தின் வாயிலாகவோ அல்லது கோவில்களில் உள்ள சிலைகளின் வாயிலாகவோ அல்லது ஏதேனும் ஒரு காணொளி வாயிலாகவோ அல்லது புத்தகத்தின் வாயிலாகவும் நாம் படிக்கும் பொழுது நமக்குள் உள்ள உணர்ச்சியானது தெய்வ பக்தியாக மாறி தெய்வத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி விடுகிறது இதை விளக்கமாக கூற வேண்டும் என்றால் சிறு வயதில் நாம் தாய் தந்தையரிடம் ஆசைப்பட்ட பொருளை உரிமையாக கேட்டுக் கொண்டிருப்போம் அவ்வப்போது நம் தாய் தந்தையார் அவர் நாம் விருப்பப்பட்ட பொருளை நமக்கு வாங்கி கொடுத்திருப்பர், அவ்வப்போது நமது முகத்தில் சந்தோசமும் சிறந்த வெற்றியும் கொண்டதாக நாம் அறிவோம். அவ்வ பொது தாயின் பாசம் தந்தையின் பாசம் நமக்கு புரிவதில்லை அதுபோல நாம் ஏதேனும் ஒரு கஷ்ட காலங்களில் அல்லது நமக்கு தேவையான ஏதேனும் ஒன்றை கடவுளிடம் வேண்டி கேட்கும் பொழுது நாம் கடவுளிடம் நம்பிக்கையுடன் வேண்டிய காரியம் ஆனது நிறைவேறியவுடன் அக் காரியத்தை கடவுள் தான் நிறைவேற்றினார் என்று நாம் நம்புகிறோம் நம் மட்டுமல்ல அனைவரும் அப்படித்தான் நம்புகிறார்கள் அதனால் தான் கடவுள் நம்பிக்கை அதிகமாக வருகிறது உண்மையாலுமே அதை நாம் வேண்டியதை கடவுள் தான் நிறைவேற்றினாரா இல்லை இயற்கையாகவே நடந்து விட்டதா என சந்தேகப்பட்டிருப்போம். நமக்குள் வரும் சந்தேகமானது சரிதான் அதாவது சில காரியங்களை கடவுளிடம் வேண்டும்பொழுது அக்கார்யமானது இயற்கையாகவே சில நேரங்களில் நடந்து விடுகிறது அதை நாம் கடவுளிடம் வேண்டியதால்தான் நிறைவேறியது என உறுதி கொண்டு இருப்போம் இவ்வாறு தான் பலரும் தெய்வத்திடம் கேட்டால் கேட்டதை கொடுத்து விடுவார் என்று நம்பிக்கை உடன் தெய்வத்தை வணங்கி ஒரு நம்பிக்கையுடன் தன் காலங்களை ஓட்டுகிறார்கள். வேண்டிய காரியம் நிறைவேறினால் கடவுள் இருப்பதாகவும் நிறைவேறவிட்டால் கடவுள் இல்லை என்றும் கூறுவார்கள். எந்த ஒரு காரியத்தையும் கடவுளிடம் கூறினாலே கூறாவிட்டாலோ நாம் உழைத்தால் தான் நமக்கான காரியம் நிறைவேறும் என்பதை மனதிற்குள்வீர்கள். கடவுளிடம் பணம் வேண்டும் என்று வேண்டி விட்டு வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தால் எவ்வாறு பணம் வரும் என நினைத்துப் பாருங்கள். ஏதேனும் ஒரு வகையில் முன்னாடியோ பின்னாடியோ நாம் உழைத்திருந்தாலோ அதற்கான பணம் வந்து சேரும். அவ்வப்போது கடவுள்தான் இப்பணத்தை எனக்கு கொடுத்தார் என்று நம்பிக்கை கொள்வோம் சில நேரங்களில் நற்காரியங்களுக்கு செல்லும் பொழுது கடவுளே வேண்டி விட்டு நம்பிக்குடன் செல்வார்கள். அவ்வப்போது தான் நாம் சென்ற இடம் நல்லதாக வெற்றியடையும் என ஒரு நம்பிக்கை கொள்வார்கள்.

 இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு நம்பிக்கை ஒன்று போதும் கடவுள் இருந்தாலோ இல்லாவிட்டாலோ வாழ முடியாது என அர்த்தம் அல்ல. வாழ்க்கை வாழ்வதற்கு நமது ஆள் மனதில் நம்பிக்கை என்ற ஒன்று ஆழமாக இருந்தால் போதும் அனைத்திற்கும் நம்பிக்கை ஒன்றே சிறந்தது இந்த நம்பிக்கையை உறுதியாக கடவுள் என்னும் ஒரு வார்த்தையை அதாவது கடவுள் எனும் ஒரு முன்னாள் வாழ்ந்த வரலாற்று கதைகளை நம்பி நாம் கடவுள் இருப்பதாக கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்க்கை வழிநடப்பு செல்கிறோம்.

 நம் வாழ்க்கையில் நம் நம்பிக்கையை கடவுளில் நம்பிக்கை ஆகும் அதாவது நம் ஆழ்மனதின் நம்பிக்கை இருந்தால் கடவுளின் நம்பிக்கை என கூறலாம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை ஆகும் அதாவது கடவுளின் வார்த்தை ஒரு நம்பிக்கையின் வார்த்தையாகும். நாம் நல்ல எண்ணங்களுடன் நல்ல பாதையிலும் நன்றாக வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் கடவுளிடம் வேண்டி என்று கூறியவுடன் நம் கடவுளிடம் வேண்டுவோம். நம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே கடவுள் எனும் சொல்லானது பயன்பட்டு வருகிறது. நம் தவறான வழிமுறைகளில் நடக்கும் பொழுது கடவுள் தண்டிப்பார் கடவுள் இருக்கின்றார் என சிலர் கூறுவார்கள் அவ்வப்போது நமக்கு சிறிது பயம் ஏற்பட்டு நம் நல்ல வழியில் செல்லலாம்  என நமக்கே தோன்றும்.


 முதலில் நம் மீது நம்பிக்கை வைத்த பிறகே கடவுளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்மால் ஏதேனும் ஒன்று முடியாத பொழுது தான் கடவுள் எனும் நம்பிக்கை துணையை தேட வேண்டும்.


 இந்தக் கதை எல்லாம் படித்துவிட்டு கடவுள் இல்லை என்று நினைத்து விடாதீர்கள். இவ்வுலகில் கடவுள் என்ற ஒன்று இல்லாவிட்டால் இங்கே எதுவுமே இல்லை. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை தான் அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் எதுவுமே இல்லை ஒரு மனிதன் தன்னால் முடியாத ஒரு செயலை செய்ய நினைக்கும் பொழுது அவனுக்கு நம்பிக்கை ஆனது குறையும் பொழுது கடவுள் என்ற ஒரு நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டு அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கடவுள் என்ற நம்பிக்கையும் ஒன்னு தான் ஆழ்மனதில் இருந்து தோன்றும் தன்னம்பிக்கையும் ஒன்றுதான். தனி மனிதன் ஒருவன் தன்னம்பிக்கை கைவிடும் பொழுது கடவுள் நம்பிக்கையை கையெடுத்து  வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.


 இவ்வுலகில் நீர் நெருப்பு காற்று ஆகாயம் பூமி ஆகிய பஞ்சபூதங்களையும் அடக்கியாள ஒரு சிறந்த நம்பிக்கை வேண்டும் என்றால் அது கடவுள் எனும் சொல்லின் மூலம் வரும்.

 இதைத் தவிர கடவுளின் சக்தி என்பது உண்மையா? பொய்யா என்று இவ்வுலகில் யாராலும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் கடவுளின் சக்திகளை ஆழ்மனதில் உணர்ச்சிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியுமே தவிர சக்திகளை கண்முன் காண்பிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவும் முடியாது. கடவுள் என்ற சொல்லின் மீது நம்பிக்கை வைத்தவருக்கு நினைத்த காரியம் நிறைவேறும் கடவுள் மீது நம்பிக்கை வைக்காமல் தன்னம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டாலும். ஆகவே கடவுள் என்பதும் நம்பிக்கை என்பதும் ஒன்றுதான்.

 கடவுள் சக்திகளையும் கடவுளையும் ஆராய நினைக்காதீர்கள். நல்வழியில் நடப்பதற்கு நான்கு குணமும் வேண்டும். நல்வழியில் நடக்க கடவுள் சக்தி இருக்கு என்று நம்புவதும் மூடநம்பிக்கை அல்ல கடவுள் இல்லை என்று நம்புவதும் மூடநம்பிக்கை அல்ல ஏதோ ஒரு வழியில் நம்பிக்கை வைத்து முன்னேறினால் வாழ்க்கை முன்னேறும்....



நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்