சோற்றுக்கற்றாழை சோப்பு செய்வது எப்படி

 இயற்கையாக வீட்டிலேயே சோப்புகள் தயாரிப்பதால் உள்ள பயன்கள்.

1) கடைகளில் அதிகமாக சோப்புகள் வாங்கி பயன்படுத்துவதால் அதில் இருக்கும் வேதியல் பொருட்கள் அனைத்தும் நமக்கு தெரியாது. அந்த வேதியல் பொருட்கள் அனைத்தும் விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2) சாதாரண பொருட்களை வைத்து சோப்பு செய்து விட்டு விளம்பரத்தில் அதிக பொருட்கள் சேர்த்து செய்வதாக காண்பிப்பார்கள்.

3) வீட்டிலேயே சோப்புகள் இயற்கையாக செய்து கொள்வதால் அதில் பக்க விளைவுகள்  நேரிடாது.

4) இயற்கையாக விளையும் பொருட்கள் இருந்து சோப்புகள் தயாரிப்பதால் இன்னும் அதிக பயன்கள் இருக்கின்றன.

5) வீட்டிலேயே இயற்கையாக சோப்பு செய்வதன் மூலம் வருமானத்தை மிச்சப்படுத்தலாம் அது மட்டுமல்லாமல் இயற்கையான நம்பகமான சோப்பை நாம் தயாரித்து விடலாம்.

சோப்பு செய்வது எப்படி


 இயற்கையான சோப்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்

1) காஸ்டிக் சோடா

2) தேங்காய் எண்ணெய்

3) தண்ணீர்

4) இயற்கை பொருட்கள் ( சோற்றுக்கற்றாழை, குப்பைமேனி இலை, கேரட், வேம்பு இலை, மஞ்சள், ஆவாரம் பூ, சந்தனம், மற்றும் உங்களுக்கு வேண்டிய ஏதேனும் ஒரு பச்சை இயற்கை தாவரங்களை எடுத்துக்கொண்டு அதை பயன்படுத்தலாம்)

5) குவளை( அல்லது ஏதேனும் ஒரு பாத்திரம்)

6) நறுமண பொருட்கள் ( விரும்பினால் )


சோற்றுக்கற்றாழைசோப்பு செய்வது எப்படி



 சோப்பு செய்முறை

1) முதலில் ஒரு லிட்டர் அளவில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு அந்த டம்ளரில் இரண்டரை பங்கு தண்ணீரை வைத்து அந்த பாத்திரத்தில் ஊத்தவும்.

3) பிறகு அதே டம்ளரில் ஒரு டம்ளர் அளவு காஸ்டிக் சோடா எடுத்து அந்த பாத்திரத்தில் போடவும்.

4) தண்ணீரில் போட்ட காஸ்டிக் சோடாவை ஒரு அரை மணி நேரம் முன்புறமாகவும் பின்புறமாகவும் நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும்.

5) காஸ்டிக் சோடா  தண்ணீரில் போட்டவுடன் சூடாக மாறிவிடும், சூடாக மாறிய காஸ்டிக் சோடாவை நன்றாக கலக்கி கொண்டே இருப்பதால் அதன் சூடானது குறைந்து குளிர்ந்த நீராக மாறும் வரையில் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

5) காஸ்டிக் சோடா கலந்த நீரானது சூடானது முழுமையாக ஆரிய பின்னர், தண்ணீர் எடுத்த அதே டம்ளரில் ஆறு டம்ளர் அளவில் தேங்காய் எண்ணெயை எடுத்து மெது மெதுவாக காஸ்டிக் சோடா உள்ள தண்ணீரில் ஊற்றிக் கொண்டே கலந்து கலக்க வேண்டும்.

6) இப்போது காஸ்டிக் சோடா கலந்துள்ள நீரானது சற்று கூலாக மாறுவதை காண்பீர்கள்

7) இவ்வாறு காஸ்டிக் சோடா கலந்த நீரில் தேங்காய் எண்ணெய் 6 டம்ளர் அளவில் பத்து நிமிடங்கள் கலக்கி கொண்டே இருக்கவும், இப்போது தேங்காய் எண்ணெய் மற்றும் காஸ்டிக் சோடா கலந்த நீரானது இரண்டும் சேர்ந்து கூலாக மாறும்.

8) இப்போது உங்களுக்கு தேவையான இயற்கை பொருட்களை எடுத்து சேர்த்துக் கொள்ளலாம் அதாவது ஒரு டம்ளர் அளவில் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

9) உதாரணமாக இயற்கை பொருளான சோற்றுக்கற்றாழையை ஒரு டம்ளர் அளவை எடுத்து அதை அம்மிலோ அல்லது ஆட்டுக்களிலோ அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக கூலாக அரைத்துக் கொண்டு அதன் பிறகு காஸ்டிக் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த நீரில் இந்த சோற்றுக்கற்றாழை மெது மெதுவாக ஊற்றி நன்றாக கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

10) இப்போது காஸ்டிக் சோடா தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கை பொருள் மூன்றும் அனைத்தும் கலந்து சோப்பாக  மாற தயாராக இருக்கும்.இவ போதே நீங்கள், உங்களுக்கு எந்த வடிவில் சோப்பானது வேண்டுமோ அதே வடிவில் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதில் இந்த காஸ்டிக் சோடா நீர் மற்றும் தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கை பொருள் கலந்த கூழை அதில் ஊற்றிக் கொள்ளவும்.( நீங்கள் சோப்பு வடிவில் சோப்பு மோல்டிங் பயன்படுத்தலாம் அல்லது டீ கப் அல்லது பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் போன்றவற்றை அறுத்து பயன்படுத்தலாம் ).


சோப்பு செய்முறை


11) இவ்வாறு ஊற்றிய பின்னர் பிறகு இரண்டு நாட்களுக்கு விட்டு விடவும். இதை இரண்டு நாட்களுக்கு நன்றாக நிழல் உள்ள இடத்தில் காய வைக்க வேண்டும்.

12) இரண்டு நாட்களுக்குப் பிறகு மோல்டிங் எடுத்து பார்த்தால் சோப்பு தயாரான நிலையில் இருப்பதை காண்பீர்கள்.

13) இரண்டு நாட்களுக்குப் பிறகு தயாரான சோப்பை எடுத்து அவ்வப்போதே பயன்படுத்திவிட கூடாது ஒன்றரை மாத காலம் வைத்து அதன் பிறகு பயன்படுத்த வேண்டும். அதாவது 45 நாட்களுக்குப் பிறகு பயன்படுத்தினால் காஸ்டிக் சோடாவின் வீரியமானது முற்றிலும் குறைந்து எந்தவித பக்க விளைவுகள் இன்றி சோப்பானது முற்றிலும் இயற்கையான சோப்பாக மாறிவிடும்.

14) இந்த முறையினை செய்யும் போது காஸ்டிக் சோடா காஸ்டிக் சோடா நீரில் கலக்கும் போது சற்று தள்ளி இருந்து கொள்ள வேண்டும். காஸ்டிக் சோடாவானது நமது மேலில் பட்டால் நமது மேலானது புண், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட கூடும் என்பதை நினைவில் கொள்வீர்கள்.

15) சோப்பு செய்த சோப்பு தயாரானவுடன் இரண்டு நாட்கள் எடுத்து பயன்படுத்தினால் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்திவிடும் .ஆகையால் ஒன்றரை மாதங்கள் அதாவது 45 நாட்களுக்கு கழித்து சோப்பை எடுத்து பயன்படுத்தினால் முற்றிலும் இயற்கையான சோப்பாக எந்த வித பக்கவிளைவுகளும் இன்றி நல்ல ஒரு சோப்பாக பயன்படுத்தலாம்.

 சோப்பு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களின் அளவுகள்


காஸ்டிக் சோடா                = 1 பங்கு ( 100கிராம் )

தண்ணீர்                              = 2.5 பங்கு ( 250 மி.லி )

தேங்காய் எண்ணெய்      = 6 பங்கு ( 600 மி.லி )

கற்றாழை                            = 1 பங்கு (100 கிராம் )

நறுமணம் (சென்ட்)           =  0.3 பங்கு (30 மி.லி ) (விரும்பினால் மட்டும் )



 இதுவே சோப்பு வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கையான மற்றும் எளிய வழிமுறையாகும்.

 இந்த தகவலை பயன்படுத்தி கடைகளில் தோப்புகள் வாங்கி பயன்படுத்தாமல் நீங்களே செய்து பாருங்கள் உங்களுக்கே பிடிக்கும் என்பதை நாங்கள் நினைவில் கொள்வோம். இயற்கையாக நாம தயாரிக்கும் சோப்பானது எந்த ஒரு சின்ன பக்க விளைவுகளையும் கூட ஏற்படுத்தாது. எனவே உங்களுக்கு தேவையான பொருட்களில் நீங்களே சோப்பு செய்து அதை பயன்படுத்தி மகிழ்வீர்கள்.

 நன்றி...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்