திக்கு கட்டு மந்திரம் என்பது இக்கட்டான நிலைகளில் இருக்கும் பொழுது திசையை கட்டி நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். நான்கு திசைகளில் இருந்தும் ஏதேனும் ஒரு ஆபத்து தாக்கும் எனில் மந்திரத்தை பயன்படுத்தி திசைகளை கற்றுக் கொள்ளலாம் இதுவே திக்கு கட்டு மந்திரம் என உச்சரிக்கப்படுகிறது.
திக்கு கட்டு மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தெளிவாக படித்துவிட்டு பிறகு பின்பற்றவும் ஏதேனும் ஒரு தவறு நெறித்தால் அந்த மந்திரம் பலிக்காமல் போவதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.
1) சிறிதளவு திருநீரை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2)பிறகு புவியத் தொட்டு வணங்கி யங் என்று திருநிறை திசை தொட்டு முன்புறம் போடவும்.
3)பிறகு திறசைத் தொட்டு பின்புறமாக வங் என்று திருநீரை போடவும்.
4)பிறகு வலப்புறமாக திரும்பிக்கொண்டு சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் திருநீரை போடவும்.
5)பிறகு இடப்புறம் திரும்பி கொண்டு திருநீரை மங் என்று போடவும்.
இச் செயல்பாடுகளை முடித்த பின்னர் குங்குமத்தையும் மலரையும் பயன்படுத்திக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்.
திக்குகட்டு மந்திரம்.
"அறஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகம் மூர்த்தியாக கொண்டேனே".
"அறி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே".
"அறிஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே".
"அறிஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்க மூர்த்தியாக கொண்டேனே".
"அறி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே" .
"அறிஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே".
"அறிஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாகக் கொண்டேனே பொறுப்பு இருப்பாக கொண்டேனே சிவன் சிவமாகக் கொண்டேன் சிவன் இருந்த வாரே".
இந்த மந்திரத்தை சிறிதளவு குங்குமம் சிறிதளவு மலரையும் கையில் வைத்துக்கொண்டு மந்திரத்தை ஒவ்வொன்றையும் உச்சரிக்க உச்சரிக்க சிறிதளவு குங்குமம் சிறிதளவு மலரும் கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் பயன்படுத்தி குங்குமத்தையும் மலரையும் ஒரே தடவை எடுத்து அதை ஒவ்வொரு மந்திரத்தையும் உச்சரிக்க ஒவ்வொரு திசையில் போட வேண்டும் அதாவது ஒரு வரி மந்திரம் முழுமையும் கூறிவிட்டு முடியும் பொழுது மந்திரத்தை அதற்கான திசையில் போடவும்.
இவ்வாறு மந்திரத்தை பயன்படுத்தி மிக சுலபமாக தெய்வீக ரூபில் சிவன் பிரார்த்தனையோடு அனைத்து திசைகளையும் கட்டி விடலாம்.
தயவு செய்து இந்த திக்கு கட்டு மந்திரத்தை நல்ல காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் நீங்கள் ஏதேனும் ஒரு ஆபத்தில் உள்ளீர்கள் என்றால் அதற்கு மட்டும் பயன்படுத்தி பலன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பாக இம்மந்திரத்தை நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் என்றால் நீங்கள் மட்டுமே உச்சரிக்க வேண்டும் வேறு ஒருவருக்காக நீங்கள் உச்சரிப்பது கூடாது. அவ்வாறு வேறு ஒருவருக்காக இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் பலன் கிடைக்காது.
மந்திரத்தை உச்சரிக்கும் முழு காலமும் முழுமையாக சிவனை நினைத்துக் கொண்டு வழிபட்டு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
நன்றி...