தேள் கடி விஷம் இறங்க எளிமையான மருந்து


விஷம் இறங்க சுக்கு
விஷம் இறங்க சுக்கு 


 நாம் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் சுக்கினை  நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

சுக்கினை அரைத்தப்பின் வரும் விழுதுகள் அல்லது சுக்குத்தூளினை தேள் கடித்த கடிவாயில் வைத்து நெருப்பில் காட்டி வர அல்லது ஏதேனும் சூட்டில் காட்டி வர வலி மற்றும் வீக்கம் மற்றும் கடுப்பானது விரைவில் குணமடையும். 

சுக்கினை அரைக்கும் போது நீர் விட்டோ அல்லது வேறு ஏதேனும் ஒன்று சேர்த்து அரைக்கக் கூடாது. 

வெறும் சுக்கு ஒன்றினை எடுத்து அதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 


சுக்கு பயன்பாடுகள்
விஷம் முறிக்கும் சுக்கு 


சுக்கினை அரைத்த பின் வரும் மாவினை அல்லது சுக்கு விழுதுகளை எடுத்து தேள் கடித்த இடத்தில் உள்ள கடிவாயில் வைத்து நன்றாக அழுத்தி நெருப்பு உள்ள இடத்தில் காட்ட வேண்டும்.

 அல்லது சூடு உள்ள இடத்தில் காட்ட வேண்டும்.

 பொதுவாக நெருப்பு உள்ள இடத்தில் காட்டினால் விரைவில் குணமடையும். 

நெருப்பு உள்ள இடத்தில் ஏன் காட்ட வேண்டும் என்றால் சுக்கானது நெருப்பு உள்ள இடத்தில் பட்டவுடன் கருகிய நிலைக்கு மாறும் அல்லது விஷம் ஏதேனும் ஏறி இருந்தால் சுக்கு எடுக்க முயற்சிக்கும்.

 இதை நீங்கள் சூட்டில் பயன்படுத்தினால் இந்த முறையானது தக்க தாமதமாகும். இந்த தகவலை தேவையானவர்களுக்கு அல்லது உங்கள் நண்பர்கள் உங்கள் உறவினர்களுக்கு பகிருங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்