சுளுக்கு குணமாக என்ன செய்வது ?

 

sulukku




நம் உடம்பில் உள்ள கால், கை, கழுத்து, இடுப்பு, போன்ற பல இடங்களில் சுளுக்கு ஏர்ப்பட்டால்,அந்த சுளுக்கினை சுலபமாக எவ்வாறு வீட்டிலேயே சரிசெய்வது என தெளிவாக பார்க்கலாம்.

சுளுக்கு குணமாக

முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, கொதிக்கவைத்த தண்ணீரை சிறிது ஆரவிட்டு, அந்த ஆரவைத்த தண்ணீரைவைத்து சூடு பொறுக்கும் அளவிற்கு சுளுக்கு உள்ள இடத்தை நன்றாக கழுவவும்.

கழுவும்போது நன்றாக அழுத்தி தேய்த்து கழுவவும். ஏனென்றால் சுளுக்கு உள்ள இடத்தில் ஏதேனும் அழுக்கு படிந்திருந்தால் அந்த அழுக்கினை வென்நீரானது எடுக்கும்.


கழுவியவுடன் மறுபடியும் தண்ணீரை சூடாக்கவும். அதாவது மறுபடியும் கொதிக்க வைக்கவும்.


கொதிக்கும் தண்ணீரில் மிகவும் சிறு சிறு கற்களை கைப்பிடி அளவிற்கு எடுத்து அந்த கொதிக்கும் தண்ணீரில் போடவும்.

கற்களை கொதிக்கும் நீரில் போட்டவுடன் நன்றாக தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

பிறகு ஒரு மிருதுவான காட்டன் துணியை எடுத்து அந்த துணியில் கொதிக்கவைத்த கற்களை போட்டு உருண்டை வடிவில் மடித்துக்கொள்ளவும். அதாவது கொதிக்கவைத்த கற்களை ஒத்தனமாக தயார் செய்துகொள்ளவும். கொதிக்கவைத்த கற்களை துணியில் போட்டு மூட்டை வடிவில் தயார் செய்துகொள்ளவும்.

பிறகு அந்த சிறு மூட்டையை கொதிக்கவைத்து லேசாக ஆராவைத்த வெண்ணீரில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தில் வைத்து இரண்டு நொடிகள் ஆனா பின்பு எடுக்கவும். இவ்வாறு சுளுக்கு உள்ள இடத்தை சுற்றியும் முழுவதுமாக செய்யவும். ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இந்த முறையை பின்பற்றவும்.


அதன் பிறகு தேங்காய் என்னையை காயவைக்கும் அதில் சிறிதளவு மிளகு அல்லது மிளகு தூள், சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக காயவைத்துக்கொள்ளவும்.

தேங்காய் என்னையில் இருந்து ஆவி வரும் அளவிற்கு அல்லது தேங்காய் என்னையானது கொதிக்கும் அளவிற்கு நன்றாக காயவைத்து கொள்ளவும்.

பிறகு காயவைத்த தேங்காய் என்னையை எடுத்து நன்றாக ஆரவைக்கவும்.

ஆரவைக்கும் பொழுது கலக்கி விட்டு ஆரவைக்கவும். அப்பொழுதுதான் மிளகு அல்லது மிளகுபொடி மற்றும் கற்பூரம் நன்றாக கரைந்து கலக்கும்.


சூடானது நன்றாக ஆரிய பின்பு தேங்காய் என்னையை ஒரு பாட்டிலில் ஊத்திவைத்துக்கொள்ளவும்.

இந்த தேங்காய் என்னையை சுளுக்குள்ள எந்த இடமாக இருந்தாலும், அந்த இடத்தில் நன்றாக தடவவும்.

தடவும்பொழுது அழுத்தி நீவிவிட்டு தடவுதல் நல்லது.

இவ்வாறு செய்தால் சுளுக்கு விரைவாக இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

ஒருவேளை தேய்த்த சிறிது மணித்துளிகளில் குணமாகவில்லை என்றால் காலை,மதியம், மாலை என மூன்று வேலையும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு செய்துவந்தால் சுளுக்கானது கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

இந்த தேங்காய் என்னயினை நீங்கள் தக்கவைத்து சுளுக்கு ஏப்படும் பொழுது எப்போதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.


இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.

இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.

பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.



                                                                        ...நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்