முகம் பளிச்சென்று மாற என்ன செய்வது

 ஆண் பெண் இருபால் இருக்கும் முகமானது கருப்பாக இருந்தாலும் அல்லது வாடிப்போய் இருந்தாலும் அல்லது முகத்தில் ஏதேனும் பருக்கள் கரும் பருக்கள் போன்ற இருந்தாலும் அவற்றை எளிதாக நீக்கி விடலாம்.

 கீழ்கண்ட விதிமுறைகளை தெளிவாக படித்து சரியான முறையில் பின்பற்றினால் உங்களுக்கு பக்க விளைவுகள் இன்றி விரைவில் கொடுக்கும் இயற்கை மருந்துகள் ஆனது வேலை செய்யும்.

முகம் பளிச்சென்று மாற என்ன செய்வது


 முகத்தை பளிச்சென்று மாற்றக்கூடிய எளிய மற்றும் சிறிய மருத்துவம்.


 முதலில் காலை எழுந்தவுடன் நன்றாக முகத்தை சோப்பு போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்.

 அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று டம்ளர் பாலை எடுத்து அதை மிதமான சூட்டில் நன்றாக காய வைக்க வேண்டும். காய வைத்த பின்னர் ஒரு கொதி வந்த பின்னர் காலை வேறொரு பாத்திரத்தில் மாற்றியோ அல்லது அதே பாத்திரத்திலோ நன்றாக ஆற வைக்க வேண்டும்.

 அதன்பிறகு கழுவிய முகத்தை ஒரு காட்டன் துணியால் அல்லது பஞ்சு துணையால் துடைத்துவிட்டு, மீண்டும் ஒருமுறை மிதமான சுடுநீரில் முகத்தை நன்றாக தேய்த்து கழுவிக்கொள்ள வேண்டும். முக்கியமாக நன்றாக தேய்த்து கழுவிக்கொள்ள வேண்டும்.


 சுடுநீரில் முகத்தை நன்றாக தேய்த்து கழுவிய பின்னர் இரண்டு நிமிடம் முகத்தை துடைக்காமல் அப்படியே விட வேண்டும். இந்த வேலையில் உங்கள் முகமானது குளிர்ச்சி அடையும் வரை காத்திருக்கவும்.

 அதன் பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து முகம் நன்றாக காய்ந்த பின்னர் அதாவது உலர்ந்த பின்னர் காய வைத்து ஆற வைத்த பாலில் இருந்து வரும் மேலாடையை அதாவது பாலில் இருந்து வரும் வெண்மை நிற ஆடையை எடுத்து முகத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இரண்டு முதல் பத்து முறைகள் வரை நன்றாக தேய்த்து அழுத்தி தேய்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையை நீங்கள் அந்த பாலாடையானது காய்வதற்குள் அதாவது உலர்வதற்குள் செய்ய வேண்டும். பாலாடையில் ஈரப்பதம்  இருக்கும் முன்னரே விரைவாக தேய்த்து முகத்தில் தடவ வேண்டும்.

 பாலாடையினை ஈரப்பதம்  காய்வதற்குள் முகத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் முதல் கால் மணி நேரம் வரை அப்படியே விட்டு விடவும்.

 இதேபோல் மாலையும் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு வேளை இரண்டு வாரங்கள் செய்தால் உங்கள் முகமானது எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் பளிச்சென்று மாறும்.

 இந்த எளிய மற்றும் சிறிய மருத்துவம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்களின் இணையத்தை மற்றவர்களுடன் பகிருங்கள். அதாவது உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த அனைவருடனும் எங்கள் இணையத்தை பகிருங்கள் மிக்க பயனுள்ளதாக எங்களுக்கும் உங்களுக்கும் அமையட்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்