Tamil Proverbs | tamil best palamoligal | தமிழ் பழமொழிகள்

 பழமொழிகள் என்பது வாழ்ககையில் நடந்த அனுபவங்களை வைத்து ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போது அந்த நிகழ்விற்கு எடுத்துக்காட்டாக மற்றும்  அந்த நிகழ்விற்கு ஏற்றவாறு ஒரு கருத்தை தெளிவாக மறைமுக வடிவில் கூறுவதாகும் .பழமொழி என்பதை நம் முன்னோர்கள் சொலகம் என அழைப்பார்கள்.இந்த பழமொழி என்பது மனித வாழ்வில் பாரம்பரியத்தில் இருந்து வந்த ஒன்றாகும் .நம் முன்னோர்கள் பழமொழிகளை அடிக்கடி மற்றும் அதிகம் பயன்படுத்தி வந்தனர் .பழமொழிகள் என்பது  வார்த்தை மட்டும் அல்ல,பழமொழிகளில் வரும் வார்த்தைகளில் கருத்துக்கள் நிறைந்து இருக்கும்.கருத்துக்களானது புரிந்தும், புரியாதவாறும் ,புதிதாக கேட்ப்போருக்கு  யோசிக்கவைக்கும் வடிவில் அமைந்திருக்கும் .ஆனால் தெளிவான கருத்துக்களுடன் புதிர் வடிவில் அமைந்திருக்கும் . இனிவரும் காலங்களிலும் பழமொழியினை தொடர்ந்து பயன்படுத்துங்கள் .நம் பாரம்பரியத்தினையும் மறைய விடாமல் வெளியே கொண்டுவாருங்கள் . தமிழினம் பெருகி தலைநிமிர்ந்து நிற்கட்டும் .


palamligal,Tamil Proverbs



பழமொழிகள்...



அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. 


காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.


சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.



உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.


பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.


கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.


காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும். 


மத்தளத்திற்கு இரு புறமும் இடி. 


அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.


கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!


 முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும் .


கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே? 


சொல்வல்லவனை வெல்லல் அரிது. 


எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

 
இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!


நுணலும் தன் வாயால் கெடும்.


கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.


கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.


 உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன்?


கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.


 அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.


 இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.


கீறி ஆற்றினால் புண் ஆறும்.


தனி மரம் தோப்பாகாது.


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.


கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.


 எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.


 எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.


நித்திய கண்டம் பூரண ஆயிசு. 


கண்டதே காட்சி கொண்டதே கோலம். 


பசியுள்ளவன் ருசி அறியான்.


ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.


கீர்த்தியால் பசி தீருமா? ஆரால் கேடு, வாயால் கேடு.

 
வாயுள்ள பிள்ளை பிழைக்கும். 


சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.


மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. 


எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?


சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.


மவுனம் கலக நாசம்.


பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.


ஓடுகிற கழுதை வாலைப் பிடித்தால் , உடனே கொடுக்கும் பலன் (உதய்).


பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது .


இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று. 


செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில்தெரியும். 


வளவனாயினும் அளவறிந் தளித்துண். 


ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா? 


எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.


களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.


தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது.


முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? 


சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
 

தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை  சுடும் .


 நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும். 


அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.


சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி. 


ஆடு கொழுக்கிறதெல்லாம், இடையனுக்கு லாபம் .


 கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். 


நாவு அசைய , நாடு அசையும்.


சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.


இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.


பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.


எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது 


மனம் போல வாழ்வு.


கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.


அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். 


ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி


விளையும் பயிர் முளையிலே தெரியும்.


உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.


பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.


இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே. 


ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.


கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?


காற்றில்லாமல் தூசி பறக்குமா? 


ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?


ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.


 இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.


அறிய அறியக் கெடுவார் உண்டா


மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
 

தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. 


குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு.


மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.


மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது. 


புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல. 


நாலாறு கூடினால் பாலாறு. 


தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.


கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.


நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.


மீதூண் விரும்பேல்.


நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை. 


நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை. 


தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.


கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும். 


தேடாது அழிக்கின் பாடாய் முடியும். 


ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.


கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.


மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.






              ...நன்றி ...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்